கொரோனா பரவல் - மத்திய அரசு கடிதம்
  • இந்தியா,  

ஏப்ரல்.22 தமிழகத்தில் கொரோனா பரவல் விகிதம் அதிகரித்திருப்பதாகவும், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படியும் தலைமைச் செயலாளருக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்துவருகிறது. டெல்லி, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநிலங்களில் தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்குContinue Reading

இங்கிலாந்து துணை பிரதமர் ராஜினாமா
  • உலகம்,  

ஏப்ரல்.22 இங்கிலாந்து நாட்டின் துணை பிரதமர் டொமினிக் ராப், பதவியை ராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் துணை பிரதமரான டொமினிக் ராப் நிதித்துறை அமைச்சராகவும் பதவி வகித்துவந்தார். இந்நிலையில், டொமினிக் ராப், தமது துறை சார்ந்த அதிகாரிகளை மரியாதைக் குறைவாகவும், கொடுமைப்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த மூத்த வழக்கறிஞர் ஆடம் டாலி என்பவர் கடந்த நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். இந்த விசாரணையின்Continue Reading

பி.எஸ்.எல்.வி விண்ணில் பாய்கிறது
  • தமிழ்நாடு,  

ஏப்ரல்.22 சிங்கப்பூரின் டெலியோஸ்-2 செயற்கைக்கோளுடன் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, ஜி.எஸ்.எல்.வி.,பி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. பேரிடர் மேலாண்மை, காலநிலை கண்காணிப்பு, தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் மட்டுமின்றி, வணிக ரீதியிலும் பல வெளிநாட்டு செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் பணிகளை இஸ்ரோ மேற்கொண்டுவருகிறது. அதன்படி,Continue Reading

தொழிலாளர் நல மசோதா - நாளை ஆலோசனை
  • விவசாயம்,  

ஏப்ரல்.22 தாராபுரம் அருகே நல்லதங்காள் நீர் தேக்க அணைக்கு 720 ஏக்கர் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்து வரும் 13ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக விவசாய சங்கம் அறிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கோனேரிப்பட்டி,பொன்னிவாடி,எழுகாம்வலசு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 120 நபர்களிடம் நல்லதங்காள் அணை கட்டுவதற்கு சுமார் 720 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு நல்லதங்காள் அணைContinue Reading

கோவை தண்டுமாரியம்மன் - சித்திரைத் திருவிழா
  • தலைப்புச் செய்திகள்,  

ஏப்ரல்.22 கோவையில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். கோவையில் பிரசித்திபெற்ற அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் அம்மனுக்கு மகா கணபதி ஹோமம்,சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வந்தது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை விமரிசையாகContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

ஏப்ரல் 21 பிறை தெரிந்ததை அடுத்து தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாட்டப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முகமது சலாவுதீன் ஆயூப் அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் மாதம் மார்ச் 24 ம் தேதி தொடங்கியது. இஸ்லாமியர்களின் முக்கியமான ஐந்து கடமைகளில் ஒன்றாக ரம்ஜான் நோன்பு கருதப்படுகிறது. பிறை தெரிந்தது முதல் தினமும் சூரிய உதயத்திற்கு முன் நோன்பினை துவக்கி, பகல் முழுவதும் தண்ணீர், உணவுContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

ஏப்ரல் 21 தினசரி 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற முறையை இச்சட்டம் கொண்டுள்ளது. 12 மணி நேரம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அதற்கேற்ற வசதிகள் இருந்தால் மட்டுமே இதற்கான அனுமதி வழங்கப்படும். குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விதிகள் பொருந்தக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. உதாரணமாக, மின்னணுவியல் துறையில்இருக்கக்கூடிய நிறுவனங்கள், தோல் அல்லாத காலணிகள் உற்பத்திச் செய்யக்கூடிய தொழில்கள்,Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

ஏப்ரல் 21 தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி 12 மணி நேர வேலை மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிகContinue Reading

  • தமிழ்நாடு,  

திமுகவினரின் ஊழல் தொடர்பாக வெளியிட்ட அனைத்து தகவல்களும் பொதுவெளியில் உள்ளவை.அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது என்று பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். கடந்த வாரம் வெளியிட்ட சொத்துப் பட்டியலை அடுத்து அவருக்கு திமுக நிர்வாகிகள் பலரும் நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். இதற்கு அண்ணாமலை தெரிவித்து உள்ள பதிலில், யாரையும் புண்படுத்துவதற்காக திமுகவினரின் சொத்து விவரங்களை வெளியிடவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் பொதுமக்களுக்கு திமுகவினரின் ஊழல்Continue Reading

  • தமிழ்நாடு,  

சென்னையில் மெரினா கடற்கரைக்கு பிறந்தநாள் கொண்டாட வந்த இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த இளைஞரை திருட வந்ததாக நினைத்து கடை ஊழியர்கள் அடித்துக கொலை செய்தது தெரியவந்திருக்கிறது. மெரினா கடற்கரையின் உட்புறச் சாலையில் பொது பணித்துறை அலுவலகம் எதிரே இளைஞர்கள் மூன்று பேர் ரத்தக் காயங்களுடன் கிடப்பது பற்றிய தகவல் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்திற்கு காலையில் கிடைத்தது. அவர்கள் விரைந்துச் சென்று படுகாயத்துடன்Continue Reading