காஷ்மீர் தீவிர தேடுதல் வேட்டை
  • இந்தியா,  

ஏப்ரல்.21 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், அதில் தொடர்புடையை தீவிரவாதிகளைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் கிராமம் கிராமமாக தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநில ரஜோரி பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது கையெறி குண்டு வீசப்பட்டதில் ராணுவ வீரர்கள் 5 பேர் பலியானார்கள். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதைத்தொடர்ந்து, ரஜோரி, பூஞ்ச் மற்றும்Continue Reading

ஐஸ்வர்யாராய் மகள் வழக்கு- டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
  • சினிமா,  

ஏப்ரல்.21 நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா உடல்நிலை தொடர்பான ஆட்சேபனைக்குரிய வீடியோ பதிவை நீக்கும்படி ‘கூகுள்’ நிறுவனத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் தம்பதியரின் 11 வயது பெண் குழந்தையான ஆராத்யா பச்சன், அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி வருவதாக யு-டியூப்பில் சிலர் வீடியோக்களை பதிவேற்றம் செய்தனர். இதை எதிர்த்து, ஆராத்யா, அவரது தந்தைContinue Reading

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. பேட்டி
  • தமிழ்நாடு,  

ஏப்ரல்.21 திமுக சொத்துப்பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில் அண்ணாமலை நீதிமன்றத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும் என தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் இன்று தொடங்கவுள்ள புத்தக கண்காட்சி திருவிழாவை முன்னிட்டுபாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ராட்சச பலூனை பறக்க விட்டார். மே மாதம் 1ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், புத்தகத் திருவிழா நடைபெறும்Continue Reading

கோவையில் துப்பாக்கிசுடும் போட்டி
  • விளையாட்டு,  

ஏப்ரல்.21 கோவை மேற்கு மண்டல காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு இடையயான துப்பாக்கிச் சுடும் போட்டி மதுக்கரை மலையடிவாரத்தில் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுக்கோப்பைகள் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. தமிழக காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 வருடங்கள் நிறைவடைந்ததை (பொன்விழா ஆண்டு) கொண்டாடும் வகையில் கோவை மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவின் பேரில், தமிழக காவல்துறையில்Continue Reading

என்.ஐ.ஏ சட்டம் - பாஜக அப்துல்லா குட்டி விளக்கம்
  • தலைப்புச் செய்திகள்,  

ஏப்ரல்.21 பாஜக கொண்டுவந்த என்.ஐ.ஏ சட்டமானது இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என பாஜக தேசிய துணை தலைவர் அப்துல்லா குட்டி தெரிவித்துள்ளார். கோவை காந்திபுரத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணை தலைவர் அப்துல்லா குட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இஸ்லாமியர், கிறிஸ்தவ, ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் சகோதரத்துடன் இந்தியாவில் உள்ளனர். தமிழகத்தில் பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று பொய்யாகContinue Reading

பொள்ளாச்சி ஜெயராமன் எச்சரிக்கை
  • தமிழ்நாடு,  

ஏப்ரல்.21 அதிமுகவின் பெயர் மற்றும் சின்னத்தை ஓ.பி.எஸ்., சசிகலா உட்பட யார் பயன்படுத்தினாலும் சட்டப்படி அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்று அக்கட்சியின் எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் பொதுச்செயலாளராக தம்மை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் 10 நாட்களில் முடிவை அறிவிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடிContinue Reading

பொதுத்தேர்வு நிறைவு - கொண்டாட்டம்
  • தமிழ்நாடு,  

ஏப்ரல்.21 தமிழகத்தில் நடைபெற்றுவந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்தன. இதனை, மாணவ-மாணவியர் உற்சாகத்துடன் கொண்டாடினர். தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 6ஆம் தேதி தொடங்கி, நேற்றுடன் நிறைவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 4216 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வை 9.76 லட்சம் மாணவ-மாணவியர் எழுதினர். அதில் 37,798 பேர் தனித்தேர்வர்கள். 13,151 பேர் மாற்றுத் திறனாளிகள். 5 பேர் மூன்றாம் பாலினத்தவர். 2,640 பேர் சிறைContinue Reading

கோவையில் அதிமுகவினர் கொண்டாட்டம்
  • தலைப்புச் செய்திகள்,  

ஏப்ரல்.21 அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை, கோவையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினர். அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் அதனை அங்கீகரித்திருந்தது. இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாராக அங்கீகரித்துள்ளது. இதனையடுத்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டContinue Reading

கட்டுரைப் போட்டியில் முதலிடம் பிடித்த நெல்லை மாணவி
  • விளையாட்டு,  

டாடா நிறுவனம் சார்பில் இந்திய அளவில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் நெல்லை மாணவி ஹிஸானா முதல் இடத்தைப் பிடித்துள்ளார். குடியரத்தலைவர் தலைமையில் நடைபெற்ற விழாவில் இதற்கான விருதும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனம் சிறப்பான இந்தியாவை உருவாக்குதல் என்ற தலைப்பில் இந்திய அளவில் கட்டுரை போட்டிகளை நடத்தியது. இந்தியா எல்லா வகையிலும் வளமான நாடாக மாற்றுவதற்கு இளம் தலைமுறையினரிடம் இருந்து இந்தக் கட்டுரைContinue Reading

கொடநாடு கொலை,கொள்ளை வழக்கு -சிபிசிஐடி விசாரணை
  • தலைப்புச் செய்திகள்,  

ஏப்ரல்.20 கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சென்னை ஆவடி ஆயுதபடை உதவி ஆணையர் கனகராஜிடம் கோவை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் கட்டப்பட்டுள்ள பங்களாவில் கடந்தContinue Reading