நெல்லையில் வியாபாரிகள் போராட்டம்
  • தலைப்புச் செய்திகள்,  

ஏப்ரல்.19 நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பணி நிறைவு செய்யப்பட்ட பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியை பயன்பாட்டிற்குத் திறக்க வலியுறுத்தி கடைகளில் கருப்புக்கொடி கட்டி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ரூ. 79 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. பஸ் நிலையத்தின் ஒரு பகுதி கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் பொதுமக்கள், வியாபாரிகள் நலன் கருதி பணிகள் நிறைவு பெற்றContinue Reading

கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்
  • சுற்றுலா,  

ஏப்ரல்.19 விழுப்புரம் அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் கோலாகலமாகத் தொடங்கியது. சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கூழ், கஞ்சிக்குடங்களுடன் ஊர்வலமாக வந்து கூத்தாண்டவரை தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவிலின் சித்திரை திருவிழா கொடியேற்றம் சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில், ஏழுContinue Reading

வல்லநாட்டில் துப்பாக்கி சுடும்போட்டி
  • விளையாட்டு,  

ஏப்ரல்.19 தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் நடந்த காவலர்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில், நெல்லை சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஷ்குமார், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 வருடங்கள் நிறைவடைந்ததை பொன்விழாவாக கொண்டாடும் வகையில், தென் மண்டல காவல் துறையில் பணிபுரியும் பெண் காவல்துறையினருக்கும், காவல் துறையில் உயர் அதிகாரிகளுக்கும் துப்பாக்கி சுடும் போட்டி தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் உள்ளContinue Reading

சட்டப்பேரவையில் கீதாஜீவன் அறிவிப்பு
  • தலைப்புச் செய்திகள்,  

ஏப்ரல்.19 தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை இரு மடங்காக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கீதாஜீவன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில், சமூக நலத்துறை, மகளிர் உரிமைத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டார். அதன்படி, உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார். மேலும், இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கும்Continue Reading

தக்காளி செடிகள் அழிப்பு - விவசாயிகள் வேதனை
  • விவசாயம்,  

ஏப்ரல்.19 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சுற்றுப் பகுதிகளில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத அதிருப்தியில், செடிகளை அழிக்கும் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, கள்ளிமந்தையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி பயிரிட்டுள்ளனர். தற்போது, இந்த பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து, விளைவித்த தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதுகுறித்துContinue Reading

கல்லீரல் செயலிழப்பு சிறப்பு சிகிச்சை மையம்
  • தமிழ்நாடு,  

ஏப்ரல்.19 கோவையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கல்லீரல் செயல் இழந்தவர்களுக்கான பிரத்யேக சிகிச்சை மையம், தற்கொலைக்கு முயன்றவர்களை காப்பாற்ற பேருதவியாக இருக்கும் என்று மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தெரிவித்துள்ளார். கோவை கே.எம்.சி.எச்.மருத்துவமனை வளாகத்தி்ல், கல்லீரல் தொடர்பான அனைத்து  நோய்களையும் குணப்படுத்துவது மற்றும் மாற்று கல்லீரல் தேவைப்படும் நோயாளிகளுக்கான  பிரத்யேக சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் தலைவர் மற்றும்  நிர்வாக இயக்குனர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில்,  பிரத்யேக கல்லீரல் செயல்Continue Reading

உதகை-கேத்தி சிறப்பு ரயில் சேவை
  • சுற்றுலா,  

ஏப்ரல்.19 கோடை சீசனுக்காக உதகையிலிருந்து கேத்தி ரயில் நிலையம் இடையே சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில், உதகை ரயில் நிலையத்திலிருந்து வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கேத்தி வரை இயக்கப்படுகிறது. மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள், யுனெஸ்கோ அந்தஸ்துபெற்ற பாரம்பரிய நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், தினந்தோறும் மேட்டுபாளையம் –Continue Reading

தூத்துக்குடி புத்தகக் கண்காட்சி ஏற்பாடு - ஆட்சியர் ஆய்வு
  • தலைப்புச் செய்திகள்,  

ஏப்ரல்.19 தூத்துக்குடியில் வரும் 21ம் தேதி மாபெரும் புத்தகக் கண்காட்சி, தொல்லியல்துறை கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது. கண்காட்சி நடைபெறவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடியில் கோடை விடுமுறையை முன்னிட்டு மாணவர்களின் சிந்தனையையும், வாசிப்பு திறனையும் வளர்க்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசியுடன் இணைந்து மாபெரும் புத்தக கண்காட்சி நடத்தப்படவுள்ளது. இந்தக் கண்காட்சி வரும் 21-ம் தேதி முதல்Continue Reading

போசியா கூட்டமைப்பு போராட்ட அறிவிப்பு
  • தமிழ்நாடு,  

ஏப்ரல்.19 தமிழகத்தில் மின்சார நிலைக்கட்டண உயர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாளை (ஏப்.20) மாநிலம் தழுவிய கதவைடைப்புப் போராட்டம் நடத்தவுள்ளதாக போசியா கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மின்சார நிலைக்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை தமிழகம் முழுவதும் ஒரு நாள் கதவு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, 23 தொழில் அமைப்புகள் இணைந்த போசியா கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். கோவையில் செய்தியாளர்களிடம் டான்சியா தலைவர் மாரியப்பன்,Continue Reading

  • சுற்றுச்சூழல்,  

சென்னை மெரினா கடற்கரையி்ல் கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைப்பதை தொடர்பான வழக்கை தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தள்ளிவைத்து விட்டது. இந்த வழக்கு மீது புதன் கிழமை விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த மாதம் 23 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மெரினா கடற்கரையில் கலைஞர் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு தடைகோரியும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள நினைவிடங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் விதிமீறல்களைContinue Reading