• தமிழ்நாடு,  

ஏப்ரல் 17 48 மணி நேரத்திற்குள் அண்ணாமலை பகிரங்க மண்ணிப்புக் கேட்க வேண்டும் என்றும், ரூ. 500 கோடி நஷ்ட ஈடு கேட்டும் திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில், பாஜக குறித்து ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதற்காக பதிலுக்கு ரூ. 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதற்கு முன்னர் BGR நிறுவனத்திற்கு முறைகேடாக திமுக வழங்கிய ஒப்பந்தத்தை வெளிக்கொண்டுContinue Reading

அண்ணாமலைக்கு அமைச்சர் அன்பில்மகேஷ் பதிலடி
  • தலைப்புச் செய்திகள்,  

ஏப்ரல்.17 பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சொத்துப்பட்டியலில் தமக்கு 1023 கோடி சொத்து இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளதற்கு, திருவெறும்பூரில் நடைபெற்ற முதலமைச்சர் பிறந்தநாள் விழாவில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார். திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வரின் 70 ஆவது பிறந்தநாள் விழா நவல்பட்டு அண்ணா நகரில் நடந்தது. இதில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசியContinue Reading

அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சி - 13 பேர் பலி
  • இந்தியா,  

ஏப்ரல். 17 மகாராஷ்டிராவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில், வெயிலின் தாக்கத்தால் 13 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயக்கமடைந்த 100க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் சமூக ஆர்வலர் அப்பாசாகேப் தர்மாதிகாரிக்கு மாநில அரசு விருது வழங்கும் விழா நடைபெற்றது. அங்குள்ள பிரமாண்ட திறந்தவெளி மைதானத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றContinue Reading

  • இந்தியா,  

ஏப்ரல்- 17. ஆப்பிரிக்க நாடான சூடான் நாட்டில் நடக்கும் மோதல் 60 பேரை பலி கொண்டு விட்டது. ராணுவத்தினருக்கும், துணை ராணுவப் படையினருக்கும் இருந்து வரும் பகை கடந்த வாரம் பெரிய அளவில் வெடித்ததால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. தலைநகர் கார்டூம் உட்பட பல நகரங்களில் இரு படை பிரிவுகளுக்கும் இடையே சண்டை , இரண்டாவது நாளாக ஞாயிற்றுக் கிழமை பகலிலும் நீடித்தது. இந்த மோதல்களினால் திங்களன்றுContinue Reading

அண்ணாமலைக்கு திமுக நோட்டீஸ்
  • தமிழ்நாடு,  

ஏப்ரல்.17 தி.மு.க தலைவர்கள் சொத்துப் பட்டியல் வெளியீடு தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 48 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்புக் கேட்பதோடு, ரூ.500 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திமுகவினரின் சொத்துப் பட்டியல் என்ற பெயரில் சில ஆவணங்களை கடந்த 14-ம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அப்போது,Continue Reading

ராகுல்காந்தி 4 அறிவிப்புகள்
  • இந்தியா,  

ஏப்ரல்.17 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றால், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000, 200 யூனிஸ்ட் மின்சாரம், இலவச அரிசி உள்ளிட்டவை வழங்கப்படும் என ராகுல்காந்தி அதிரடியாக அறிவித்துள்ளார். கர்நாடாகவில் சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெறவுள்ளது. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன. இந்நிலையில், இந்தத் தேர்தல் ராகுல்காந்தி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றைContinue Reading

மிஸ் இந்தியா 2023
  • இந்தியா,  

ஏப்ரல்.17 இந்திய அழகி 2023க்காக நடத்தப்பட்ட போட்டியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது நந்தினிகுப்தா முதலிடத்தைப் பிடித்து “மிஸ் இந்தியா 2023” பட்டத்தை வென்றார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரில் 2023ம் ஆண்டுக்கான இந்திய அழகியை தேர்வு செய்வதற்கான போட்டி நடத்தப்பட்டது. இதில் 30 மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டனர். இந்தப் போட்டிக்கான நடுவர் குழுவில், கடந்த, 2002ல் இந்திய அழகி பட்டம் வென்றContinue Reading

மு.க.ஸ்டாலினுக்கு எச்.ராஜா எச்சரிக்கை
  • தமிழ்நாடு,  

ஏப்ரல்.17 தமிழக அரசின் அகம்பாவம் உச்சகட்டத்திற்கு போயிருப்பதாகவும், ஸ்டாலின் ரொம்ப பேசினால் அரசாங்கம் போய்விடும் என்றும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில் சீருடையுடன் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, தேர்நிலை திடலில் ஆர்எஸ்எஸ் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, PFI (பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்) இந்தியா உட்படContinue Reading

ஐபிஎல் - சென்னை பெங்களூரு அணிகள் மோதல்
  • விளையாட்டு,  

ஏப்ரல்.17 ஐ.பி.எஸ் கிரிக்கெட் போட்டியின் 24வது லீக் ஆட்டத்தில் இன்று சென்னை – பெங்களூரு அணிகள் மோதுகின்றன. 16வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில் மொத்தம் 74 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. ஐ.பி.எல் இறுதிப் போட்டி அமகதாபாத்தில் நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரை, ராஜஸ்தான் ராயல் அணியை வீழ்த்தி, குஜராத் டைட்டன்ஸ் அணி கைப்பற்றியது.Continue Reading

பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம்
  • சுற்றுலா,  

ஏப்ரல்.17 திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்காக விடுமுறையையொட்டி, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் கோடையிலும் தண்ணீர் கொட்டி வருவதால் தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தை தணிக்க விடுமுறை நாட்களில் மக்கள், தங்கள் குடும்பத்துடன் அருவிகளில் சென்று குளிப்பதை விரும்புகின்றனர். அந்தContinue Reading