மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்தது
  • தமிழ்நாடு,  

ஏப்ரல்.15 தமிழகத்தில் கிழக்குக் கடற்கரையோர மாவட்டங்களில் இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரையிலான கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் விசைப்படகுகள், இழுவைப் படகுகளில் மீன்பிடிக்கச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்கீழ், தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப்பகுதிகளில் ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில்கொண்டு மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுவருகிறது. அதன்படி, குறிப்பிட்ட தடைக்காலத்தில்Continue Reading

  • இந்தியா,  

Fri, 14 Apr 2023 ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கு இந்தியன் வங்கி இணங்காதது உறுதி செய்யப்பட்டது. வழிகாட்டுதல்களுக்கு இணங்கத் தவறியதால் ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. ஆனால் இந்தியன் வங்கி இதற்குப் பதிலளிக்கவில்லை. இந்திய வங்கிகள் விதிமுறைகளைப் பின்பற்றி நடக்கத் தவறும் பட்சத்தில், வங்கிகள் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்திய ரிசர்வ் வங்கி. இந்நிலையில், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுContinue Reading

  • இந்தியா,  

14 Apr 2023 மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட நிலையில், இன்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் மிகப்பெரிய தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளை தோற்கடித்து 2013ம் ஆண்டு ஆம் ஆத்மிContinue Reading

  • உலகம்,  

14 Apr 2023 டெக்சாஸில் இருக்கும் சவுத்ஃபோர்க் டெய்ரி பால் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 18,000 க்கும் மேற்பட்ட பசுக்கள் உயிரிழந்தன. இந்த சம்பவம் அமெரிக்காவில் இதுவரை ஏற்பட்ட பண்ணை தீ விபத்தில் மிக மோசமானது என தெரிவித்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. மேலும் பண்ணையை உரிமையாளர்கள் இந்த சம்பவம் குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. காஸ்ட்ரோ கவுண்டி ஷெரிப் அலுவலகம்Continue Reading

  • உலகம்,  

Fri, 14 Apr 2023 இந்தோனேசியாவில் இன்று பிற்பகலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.0 என பதிவாகி உள்ளது. இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேஷியாவின் வடக்கு பகுதியான டூபன் என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில்  7.0Continue Reading

  • இந்தியா,  

APRIL 14, 2023 இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனையடுத்து மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அதிகரிக்கும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும், மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. இதனால் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது சில மாநிலங்களில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மருத்துவமனைக்கு வருபவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறைContinue Reading

  • இந்தியா,  

Fri, 14 Apr 2023 மக்களை தேசவிரோதிகளாக சித்தரிக்கும் போக்கும் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் அழித்துவிடும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், “டாக்டர் பாபாசகேப் அம்பேத்கரின் மகத்தான பங்களிப்புகளுக்காக, அவரின் இந்த 132 வது பிறந்தநாளில் இந்திய தேசிய காங்கிரஸ் அவருக்கு தலைதாழ்த்தி வணக்கம் தெரிவிக்கிறது. ஜனநாயகக் கொள்கைகளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும்Continue Reading

  • இந்தியா,  

Fri, 14 Apr 2023 அரசியலில் இதெல்லாம் ரொம்ப சாதாரணம் என்று சொல்லி இருக்கிறார் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை. முன்னாள் முதல்வர் லட்சுமண் சவதி விலகல் குறித்து அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் வரும் மே பத்தாம் தேதி சட்டமன்றத் தேர்தலில் நடைபெற இருக்கிறது. இதில் 224 தொகுதிகளில் 189 தொகுதிகளில் போட்டியிட பாஜக வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது. இந்த பட்டியலில்Continue Reading

  • இந்தியா,  

உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து 16-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற உளள் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கான வழிமுறைகளை தமிழ்நாடு காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு வெளியிட்டு உள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி பேரணியில் ஈடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டு இருக்கிறார். பேரணியின் போது எந்த விதமான பாடலோ அல்லது சைகைகளோ காண்பிக்காமல் நடந்து கொள்ளவேண்டும். பொது மக்களுக்கு இடையூறாகவும், வாகனContinue Reading

  • தமிழ்நாடு,  

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, திங்கட்கிழமை முதல் சென்னை உயர் நீதிமன்றத்திலும் மற்ற கீழமை நீதிமன்றங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமக்கப்பட்டுள்ளது. தலைமை பதிவாளர் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  உயர் நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள், வழக்காடிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் திங்கள் கிழமை முதல் முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயம் என்று தெரிவித்து உள்ளார். தனி மனித இடைவெளியைப் பின்பற்றி கைகளை அடிக்கடி கழுவவேண்டும் என்று வலியுறுத்திContinue Reading