• இந்தியா,  

கேரளா மாநிலம் வயநாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, எம்.பி. பதவி, வீடு, அடையாளம் ஆகியவற்றை வேண்டுமானால் பாஜக எடுத்துக்கொள்ளலாம், சிறையில் அடைக்கலாம் ஆனால் நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது என்று தெரிவித்தார். பிரதமர் நரேந்திரமோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு அண்மையில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனை தொடர்ந்து, ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதிContinue Reading

  • இந்தியா,  

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதில், மருத்துவர்கள், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், 31 முதுகலைப்பட்டதாரிகள், 8 பெண்கள் உட்பட மொத்தம் 189 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் 222 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல், மே 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கி, ஏப்.20ம் தேதி வரை நடைபெறுகிறது. ஏப்ரல் 21ம் தேதி வேட்புContinue Reading

  • வானிலை செய்தி,  

தமிழகத்தின் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நண்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டுமென மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஏப்.11 முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கடுமையான வெயில்Continue Reading

  • விளையாட்டு,  

தனி நபர் நடிப்புப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்து, துபாய் செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ள கோவையைச் சேர்ந்த திருநங்கை மாணவி அஜிதாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வியைத் தாண்டி தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறை நுண்கலை, விளையாட்டு, அறிவியல், இசை, கலாச்சார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், நடப்பு 2022-23ம் கல்வியாண்டில், சிறந்துContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளைக் காண அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பாஸ் வழங்க வேண்டுமென கேட்ட அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணிக்கு, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி அளித்த சுவாரஷ்யமான பதிலால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் சிரிப்பலை நீடித்தது. தமிழக சட்டப்பேரவையில் பேசிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை காண அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பிரத்யேக பாஸ் வழங்க வேண்டும். கடந்த ஆட்சியில் எம்.எல்.ஏ.க்களுக்கு 400Continue Reading

  • தமிழ்நாடு,  

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் பாகுபாலி யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டுப்பாளையம் அருகே உள்ள சமயபுரம் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்த கிராமம் மேட்டுப்பாளையம்-வனப்பத்திரகாளியம்மன் கோயில் செல்லும் சாலையில் உள்ளது. இந்நிலையில், அருகிலுள்ள நெல்லிமலை வனப்பகுதியிலிருந்து தினமும் உணவு, குடிநீர் தேடி காட்டு யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்டContinue Reading

  • இந்தியா,  

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,676 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோன பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 6 ஆயிரத்தை தாண்டி தினசரி பாதிப்பு பதிவாகி வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவில் 6,050 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சனிக்கிழமை 6,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் நேற்றுContinue Reading

  • Uncategorized,  

கர்நாடக மாநிலத்தில் கர்நாடக பால் கூட்டமைப்பு, அம்மாநில விவசாயிகளிடம் இருந்து பாலை மொத்தமாக வாங்கி நந்தினி என்ற பிராண்ட் பெயரில் பால் மற்றும் பாலில் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், அண்மையில் குஜராத்தில் உள்ள அமுல் நிறுவனம் கர்நாடக சந்தையிலும் களம் இறங்க உள்ளதாக அறிவித்தது. தலைநகர் பெங்களூருவில் அமுல் பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்கும் என்று அமுல் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து அமுல்Continue Reading

  • இந்தியா,  

விரும்பத்தகாத தொழிலதிபர்களை சந்திக்க ராகுல் காந்தி வெளிநாட்டுக்கு செல்வார் என்பதற்கு 10 உதாரணங்களை என்னால் கொடுக்க முடியும் என்று முன்னாள் காங்கிரஸ்காரர் குலாம் நபி ஆசாத் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கடந்த தினங்களுக்கு முன் டிவிட்டரில், அதானி பெயருடன், காங்கிரஸில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரெட்டி, ஹிமாந்தா பிஸ்வா சர்மா மற்றும் அனில்Continue Reading

  • இந்தியா,  

ராஜஸ்தானில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான முந்தைய பா.ஜ.க. அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது கெலாட் அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி சச்சின் பைலட் இன்று ஒரு நாள் உண்ணாவிரப் போராட்டம் நடத்த உள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான சச்சின் பைலட்டுக்கும் இடையே நீ்ண்ட நாட்களாக பனிப்போர் நிலவிContinue Reading