• தமிழ்நாடு,  

விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி நிலையம் எதிரே உள்ள ஆவின் பால் விற்பனை நிலையத்தில் வாங்கிய குல்பியில் ஈ இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டம் ஒருங்கிணைந்து விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் ஆவின் பால் உற்பத்தி நிலையம் விழுப்புரம் திருச்சி சாலையில் உள்ளது. இந்த கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் சேர்மனாக திமுக பிரமுகர் தினகரன் இருந்துவருகிறார். இவர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் நிலையம்Continue Reading

  • இந்தியா,  

காஷ்மீரையும் லடாக்கையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் சோஜிலா சுரங்கப்பாதை (( Zojila Tunnel )) அடுத்த ஆண்டுடில் போக்குவரத்துக்கு திறக்கப்பட உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 11 ஆயிரத்து 649 அடி உயரத்திலான இந்தச் சுரங்கப் பாதையை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை சோஜிலா கணவாய் வழியாகத்தான் இந்திய ராணுவத்துக்குத் தேவையான பொருட்கள் காஷ்மீரில் இருந்து லடாக்குக்குச் கொண்டுச் செல்லப்பட்டு வருகின்றன. இந்தப் பாதையும் பயணமும்Continue Reading

  • விளையாட்டு,  

குஜராத் மாநிலத்தில் பள்ளி ஒன்றில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் குறித்து கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு வினாத்தாளில் சச்சின் டெண்டுல்கர் எந்த விளையாட்டின் வீரர் என்ற கேள்வி ஒன்று இடம் பெற்றிருந்தது. இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. அதிசயம் என்னவென்றனால் அந்த கேள்விக்காக கொடுக்கப்பட்ட 4 விருப்பங்களில் ஹாக்கி, கபடி, கால்பந்து, செஸ் ஆகியவை மட்டுமேContinue Reading

  • விளையாட்டு,  

சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டு, இசைக்கு ஏற்றவாறு தங்களது கட்டுடலை அசைத்து காட்டி பார்வையாளர்களை அசரவைத்தனர். தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சேலம் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியை சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றிContinue Reading

  • தமிழ்நாடு,  

தமிழகத்தில் 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை ஒரு மாத காலத்தில் ஒதுக்கீடு செய்யவில்லை என்றால் பாமக சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என அரசுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவண்ணாமலை நகரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 6188 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட திருவண்ணாமலை மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரித்து செயல்பட தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்Continue Reading

  • தமிழ்நாடு,  

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டுவரவுள்ளார். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். இதற்கிடையே ஒரு மசோதாவை நிறுத்தி வைத்திருந்தாலே அது நிராகரிப்பதாக தான் பொருள் என ஆளுநர் அண்மையில் பேசிய பேச்சு கடும் சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவை 3 நாள் விடுமுறைக்குப் பிறகு கூடவுள்ளது. அதில், ஆளுநருக்கு மத்தியContinue Reading

  • சினிமா,  

கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் “எங்கள் முதல்வர் – எங்கள் பெருமை” புகைப்பட கண்காட்சியை நாட்டுப்புற கலைஞர்களான செந்தில்-ராஜலெட்சுமி தம்பதி பார்வையிட்டனர். கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்று வரும் “எங்கள் முதல்வர்-எங்கள் பெருமை” கண்காட்சியை கடந்த 7ஆம் தேதி நடிகர் சத்யராஜ் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களும் இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாட்டுப்புற கலைஞர்களான செந்தில்-ராஜலெட்சுமி தம்பதி, இன்று புகைப்பட கண்காட்சியைContinue Reading

  • சுற்றுலா,  

நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தெப்பக்காட்டிற்கு வந்த பிரதமர் நரேந்திரமோடி, ஆஸ்கார் நாயகர்களான பொம்மன், பெள்ளி தம்பதியரை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் உள்ள பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. இதையடுத்து, 50-வது ஆண்டு பொன்விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி மைசூருக்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாகContinue Reading

  • விவசாயம்,  

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படாததைக் கண்டித்து நூதன போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நாள் முழுவதும் பசுவிடமிருந்து பாலைக் கறக்காமல் கன்றுக்கு மட்டும் கொடுத்து நூதன போராட்டத்தை நடத்த விவசாயிகள் திட்டமிட்டு வருகின்றனர். இதுகுறித்து பேசிய விவசாயிகள், விவசாயம் சார்ந்த உபதொழிலாக கால்நடை வளர்ப்பு உள்ளது. விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்காத போது கால்நடை வளர்ப்பு கைகொடுக்கும். ஆனால், சமீபContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகள் துன்புறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஐஏஎஸ் அதிகாரி அமுதா முன்னிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இன்று முதல் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கலாம் என நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அம்பாசமுத்திரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில், திங்கள்கிழமை முதல் விசாரணை நடைபெறும். ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்-ஆல் பாதிக்கப்பட்டவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்கள்,Continue Reading