• தமிழ்நாடு,  

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு காவல்துறையால் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட நபர்கள் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் விசாரணைக்காக ஆஜராகினர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சரகத்தில் உதவி காவல்துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றிய பல்வீர்சிங், குற்ற வழக்குகளில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக வெளியாக புகார் பல்வேறு தரப்பிலும் பெரும் அதிர்வலையை உருவாக்கியது. இதைத்தொடர்ந்து, உதவி காவல்துறை கண்காணிப்பாளர் பல்வீர்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.Continue Reading

  • தமிழ்நாடு,  

கோவை மாவட்டத்தை “விபத்தில்லா கோவை”யாக உருவாக்கும் நோக்கத்தில் மாநகரின் 6 இடங்களில் காவல்துறை சார்பில் சிறப்பு வாகனத் தணிக்கை முகாம் நடத்தப்பட்டது. கோவை மாநகரத்தில், வாகன விபத்துகள் நடைபெறாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, “விபத்தில்லா கோவையாக” உருவாக்கும் பொருட்டு, கோவை மாநகர காவல் ஆணையரின் உத்தரவுப்படி, கோவை மாநகரில் 6 இடங்களில் (பொள்ளாச்சி ரோடு – ரத்தினம் காலேஜ், பாலக்காடு ரோடு – நேரு காலேஜ், பேரூர் பைபாஸ் ரோடுContinue Reading

  • சுற்றுச்சூழல்,  

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சிப் பணிகளை நெல்லை மாவட்ட பயிற்சி உதவி ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, அகழ்வாய்ப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். பண்டைய தமிழர்களின் நாகரீகத்தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் பல்வேறு கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள், பழங்கால மண்பாண்ட பொருட்கள், இரும்பாலான ஆயுதங்கள், தங்க அணிகலன்கள், வெண்கல பொருட்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, ஆதிச்சநல்லூரில் உலகத்தரம்Continue Reading

  • தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், இன்று முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் உள்பட அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று தெரிவித்தார். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும்Continue Reading

  • வணிகம்,  

நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகளில் விற்பனை செய்யப்படும் நகைகளுக்கு கட்டாயம் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டுமென்ற மத்திய அரசின் உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தியாவில் பல நகைக்கடைகளில் வாங்கப்படும் தங்கம் சுத்த தங்கமாக இருப்பதில்லை எனத்தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், ஏப்ரல் 1ம் தேதி முதல் தங்க நகைகளை விற்கும்போது அதில் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும் என நகைக்கடைகளுக்கு மத்திய அரசுContinue Reading

  • தமிழ்நாடு,  

சென்னை அடையாறு கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 4 பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த 2 நாட்களாக மாணவிகள் நடத்திவந்த உள்ளிருப்புப் போராட்டம் வாபஸ் பெற்றப்பட்டுள்ளது. சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் ருக்மணிதேவி கல்லூரி கலை கல்லூரி இயங்கிவருகிறது. மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி முறையில் செயல்படும் இந்தக் கல்லூரியில் பரதநாட்டியம் உள்ளிட்ட கலைகள் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தக் கல்லூரியில் உள்ள ஆசிரியர்Continue Reading

  • விளையாட்டு,  

மத்தியபிரதேஷ் மாநிலத்தில் தேசிய அளவில் நடைபெற்ற காது கேளாதோர் மற்றும் வாய் பேசமுடியாதவர்களுக்கான குண்டு எரிதல் போட்டியில் தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி 3-ம் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். மத்திய பிரதேஷ் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோருக்கான தேசிய அளவிலான குண்டு எரிதல் போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில்Continue Reading

  • தமிழ்நாடு,  

தர்மபுரியில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி இந்தியன் வங்கி அருகில் கோல்டன் தெருவில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி, ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவி உற்சவங்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். வளையல், புடவை, மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, பழங்கள் மற்றும் சீர்வரிசையுடன் வந்து பக்தர்கள் திருக்கல்யாணContinue Reading

  • Flash news,  

கர்நாடக அரசின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, கர்நாடக சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 104 இடங்களில் பாஜகவும், காங்கிரஸ் 80 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 37 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய 3 கட்சிகளிடேயேதான் பிரதான போட்டி உள்ளது. இந்நிலையில்Continue Reading

  • தமிழ்நாடு,  

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக சட்டப்பேரவையில் கடந்த 20ஆம் தேதி நடப்பாண்டிற்கான அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் அரசு ஊழியர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, கடந்த 21 ஆம் தேதி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில்Continue Reading