• Top News,  

*தமிழக ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி நாடாளுமன்ற மக்களவையில் திமுக நோட்டீஸ்.. அரசுக்கு எதிராக செயல்படும் கவர்னரை நீக்க வேண்டும் என்று நோட்டீசில் டி.ஆர்.பாலு வலியுறுத்தல். *அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ரா பதவியை அக்டோபர் வரை நீட்டிக்குமாறு மத்திய அரசு விடுத்த கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.. செப்டம்பர் 15 வரை பதவியில் தொடருவதற்கு மட்டும் அனுமதி. *உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தொடர்பான மேல் முறையீட்டு மனு மீதுContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஜுலை,27- விளைந்து கதிர்விடும் நெற்பயிர்களை இயந்திரங்களைக் கொண்டு என்.எல்.சி.நிர்வாகம் அழிக்கும் காட்சியை பார்க்கும் கல் நெஞ்சக்காரர்கள் கூட கலங்கிப் போய்விடுவார்கள். நெய்வேலியை சுற்றி நடைபெற்று வரும் பயிர் அழிப்பு கடுமையான கண்டனத்தை ஏற்படுத்தி  உள்ளது. கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்படும் என்.எல்.சி. நிறுவனம் தனது இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக கரிவெட்டி, கத்தாழை, மும்முடி சோழகன், வளையமாதேவி கிராமங்களில் கடந்த 2016- ஆம் ஆண்டு விவசாய நிலங்களை கையகப்படுத்தியது. அப்போது ஏக்கருக்குContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஜுலை,27- தமிழக அமைச்சரவையில் மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆகிய வளமான துறைகளின் அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் கடந்த ஜுன் மாதம்  14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ‘செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது,சட்டப்பூர்வமானது-அவரை காவலில் எடுத்து விசாரிக்க , அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது’ என சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. சிறையில்Continue Reading

  • Top News,  உலகம்,  

ஜுன், 27- உலகில் மிக நீண்ட காலம் பதவியில் இருந்த தலைவர்களில் ஒருவரான கம்போடியப் பிரதமர் ஹுன் சென் ஒரு வழியாக ராஜினாமா செய்துவிட்டார்.  கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் பதவியில் இருந்த அவர்,  தனது மூத்த மகனிடம் அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு பதவி விலகுவதாக தெரிவித்து இருக்கிறார். கம்போடியாவில் ஹுன் சென் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார். அவர்,  தான் அதிகாரத்தில் இருப்பதை எதிர்க்கும் அனைவரையும்Continue Reading

  • Top News,  உலகம்,  

ஜுலை,27- அபின்,கஞ்சா வரிசையில் இப்போது ஸ்மார்ட் போன்களும் புதியதொரு போதைப்பொருளாகி விட்டது. சிறார்களும் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகி,சதா சர்வ நேரமும் அதிலேயே கிறங்கிக்கிடக்கிறார்கள். சிறார்கள் என இங்கே குறிப்பிடுவது,பள்ளிக்குழந்தைகளை மட்டுமல்ல,ப்ரிகேஜியில் சேர்வதற்கான வயது கூட முதிராத, பிஞ்சு குழந்தகளையும் சேர்த்துத்தான். விழித்து எழுந்ததும், பால் பாட்டில் கூட தேவை இல்லை- கேம்ஸ் விளையாட ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் எனும் நிலைக்கு , ஸ்மார்ட் போன்கள், மழலைகளை விழுங்கி விட்டது.Continue Reading

  • Top News,  சினிமா,  

ஜுலை, 27- இருபது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘ரெட்’ படத்தில் அஜித், சிவப்பு உடையில் ஏதாவது காட்சியில் வந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் சிவப்பு நிற உடை – நரைமுடியுடன் புன்னகை பூத்தபடி வெளியே வரும் தோற்றம், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஜெயிலர், லால்சலாம் ஆகிய இரு படங்களை முடித்து விட்டு ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி விட்டார்Continue Reading

  • Top News,  சினிமா,  

மணிரத்தினம் இயக்கிய  தளபதி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அரவிந்த்சாமி.ரஜினி ஹீரோவாக நடித்த இந்தப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன்பின் மணிரத்னத்தின், கம்பெனி ஆர்டிஸ்டாக மாறிப்போனார், அரவிந்த்சாமி. ரோஜா, பம்பாய்,செக்கச்சிவந்த வானம் என மணிரத்னத்தின் வெற்றி படங்களில் எல்லாம், அரவிந்த்சாமி இருந்தார். தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்திப்படங்களிலும் நடித்தார். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அவர் பிடிவாதம் காட்டாமல் வில்லன் வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்தContinue Reading

  • Top News,  

*திமுக பைல்ஸ்- 2 என்ற பெயரில் திமுக நிர்வாகிகள் மீதான ஊழல் புகார்களுக்கான ஆவணங்களை ஆளுநரிடம் அண்ணாமலை கொடுத்ததால் பரபரப்பு.. ரூ 5600 கோடி மதிப்பிலான மூன்று ஊழலுக்கான ஆதாரங்களையும் வழங்கி நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளதாக தகவல். *திமுகவினரின் ஊழலுக்கான ஆதாரங்கள் என்று கூறி 16 நிமிட வீடியோவை வெளியிட்டார் அண்ணாமலை..போக்குவரத்துத் துறையில் மட்டும் ரூ 2 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக புகார். *தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகளை உடனடியாகContinue Reading

  • Top News,  இந்தியா,  

’கேபிடல் பனிஷ்மென்ட்’ எனும் மரணதண்டனை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொருவிதமாக நிறைவேற்றப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலும்கொலையாளிகளுக்கே மரண தண்டனைவிதிக்கப்பட்டு, அவர்கள் உயிர் , தூக்கு மூலமாக பறிக்கப்படுகிறது. அரபு நாடுகளின் போதைப்பொருள்கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கும் மரணதண்டனை தரப்படுகிறது. மிகவும் குரூரமாக வாளால் தலையைகொய்து பொதுமக்கள் மத்தியில் இந்ததண்டனைகள் நிறைவேற்றப்படும் . சில வெளிநாடுகளில் குறைந்த பட்சவலியை தரக்கூடிய வகையில்  மின்சாரம்பாய்ச்சியும், விஷ ஊசி செலுத்தியும் மரணதண்டனை அளிக்கப்படுகிறது. துப்பாக்கியால் சுட்டும்  இந்த தண்டனையைசிலContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஜுலை,26- மணிப்பூரில்  பெண்களுக்கு  நிகழும்   கொடூரங்களை கண்டித்து தென்காசியில் இரு தினங்களுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தெற்கு மாவட்ட திமுக. செயலாளர் சிவபத்மநாதன் பங்கேற்றுப் பேசினார். கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்   தமிழ்செல்வியும் கலந்து கொண்டார். இருவருக்கும் இடையே சில மாதங்களாகவே சுமுக பேச்சுவார்த்தை இல்லை.மேடையில் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை. சிவபத்மநாதன் பேசி முடித்ததும், தமிழ்செல்வி பேச எழுந்தார். ஆனால் அவரை பேசவிடாமல் சிவ பத்மநாபன் தடுத்து மைக்கைContinue Reading