• Top News,  இந்தியா,  தமிழ்நாடு,  

சொத்துக்களை பாதுகாப்பதற்காக தொழில் அதிபர்கள், வணிகர்கள் ,திரைப்பட நட்சத்திரங்கள், போன்றோர் அரசியலில் நுழைவது, நாடு முழுவதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அநேகமாக அனைத்துக்கட்சிகளுமே அவர்களை அரவணைத்துக்கொள்கின்றன. இந்நிலையில் தென் இந்தியாவில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் பலர் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்து கோடிகளை குவித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் குறித்த விவரங்களை, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு அண்மையில் வெளியிட்டது. நாடு முழுவதும் அதிக சொத்துக்களை வைத்துள்ள 100Continue Reading

  • Top News,  சினிமா,  

ஜுலை, 26- 45 ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்த கவுண்டமணி, கொஞ்சகாலம் திரைஉலகை விட்டு விலகி இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் 89ஓ,  எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில் அரசியல் பேசும் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளார். படத்தின் பெயர் – ‘ஒத்த ஓட்டு முத்தையா’. படத்தின் தலைப்பே இது, அரசியலை நையாண்டி செய்யும்Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஜுலை,26- கலைச்சேவை செய்வதற்காக கோடம்பாக்கத்தில் இருந்து அடிக்கடி பெரிய நட்சத்திரங்கள் மலேஷியா செல்வது வழக்கம்.அதற்கான ஏற்பாடுகளை கவனிக்கும் தொழில் அதிபர், கைது செய்யப்பட்டுள்ளதால் தமிழ் நடிகர்- நடிகைகள் கலக்கம் அடைந்துள்ளனர். போலீசில் சிக்கியுள்ள வர்த்தகர் பெயர் அப்துல் மாலிக் தஸ்கீர்.அவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மீம்சல். சின்ன வயதிலேயே மலேஷிய சென்ற மாலிக், துணிக்கடையில் சாதாரண சிப்பந்தியாக  வாழ்க்கையை ஆரம்பித்தார். அங்கு பெரிய நட்புContinue Reading

  • Top News,  சினிமா,  

ஜுலை, 26- பெயருக்கு ஏற்றபடி தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை கொடுத்து வருபவர் இயக்குநர் வெற்றிமாறன். அவர், ‘விடுதலை’ படத்தை இரண்டு பாகங்களாக இயக்க முடிவு செய்தார். இந்தபடத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சூரி, விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர், பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோர்  பிரதான கதாபாத்திரங்களில் வந்தனர்.. இளையராஜா இசையமைத்த இந்தப்படம் அனைத்துContinue Reading

  • Top News,  

*அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிப்பதுக் குறித்து உச்சநீதிமன்றம் தான் முடிவு செய்யவேண்டும்..சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு வழக்கை முடித்து வைத்து உத்தரவு. *செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் என்ற முந்தைய தீர்ப்பில் உறுதியாக உள்ளதாக நீதிபதி நிஷா பானு கருத்து.. அமலாக்கத்துறை காவலுக்கு எப்படி உத்தரவிட முடியும் என்றும் கேள்வி. *உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தொடர்பான மனுக்கள் மீது நாளை விசாரணை.. காவலில்Continue Reading

  • தமிழ்நாடு,  

ஜுலை, 25- சென்னையில் பிரபல டெக்ஸ்டைல் உரிமையாளரின் கார் மோதி 60 வயது முதியவர் இறந்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி உள்ளது. கே.கே நகரை சேர்ந்த ரவிவர்மா என்பவர் இரு சக்கர வாகனம் ஒன்றில் தியாகராயர் நகரில் உஸ்மான் சாலை மேம்பாலம் வழியாக கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று ரவிவர்மா ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் பின்புறமாக மோதியது.   இதில் தூக்கிContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஜுலை, 25- “சர்ச்சை நாயகன்” அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடு்த்து விசாரிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்றுக் கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துவிட்டது. கடந்த மாதம் 14- ஆம் தேதி சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார் என்பது நினைவுக் கூறத்தக்கது. இதனைContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  விவசாயம்,  

ஜுலை,25- தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு பத்து ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தக்காளி, வெங்காயம்  ஆகியவற்றைத் தொடர்ந்து அரிசி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினரை கொஞ்சம் கலங்கத்தான் செய்திருக்கிறது. சாப்பாட்டு அரிசி 25 கிலோ கொண்ட மூட்டை ரூ.200 வரை கூடியுள்ளது. இந்த அரிசியின் விலை சில்லரை விற்பனையில் கிலோவிற்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது. 25 கிலோ சிப்பம், ஆயிரத்து 200 ஆக இருந்தContinue Reading

  • Top News,  உலகம்,  

ஜுலை,25- எதிர்க்கட்சிகள் கூட்டணியான இந்தியாவை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.  “இந்தியன் முஜாஹிதீன்”, “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” போன்ற அமைப்புகளின் பெயரில் கூட இந்தியா என்ற பெயர் இருக்கிறது. அதனால் பெயரால் ஒன்றும் நடந்து விடப் போவதில்லை என்று மோடி தெரிவித்து இருக்கிறார். பாரதீய ஜனதா கட்சி  எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் பேசிய மோடி.”இதுபோன்ற திசையற்ற எதிர்க்கட்சியை நான் பார்த்ததில்லை”Continue Reading

  • Top News,  இந்தியா,  

ஜுலை,25- நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, பாஜகவுக்கு எதிராக ‘ இந்தியா’ எனும் பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளது. இதனால் பாஜக கலக்கம் அடைந்துள்ளது.’இந்தியா’ அணியில் இருக்கும் முக்கிய தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்க காய் நகர்த்தி வருகிறது. வெவ்வேறு தளங்களில் இதற்கான வேலைகள் வேகம் எடுத்துள்ளன. இந்த அணியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை இழுக்க அவரது அண்ணன் மகன் அஜித்பவார் மூலம் பேரம் பேசப்பட்டது.Continue Reading