• Top News,  சினிமா,  

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். அவரது மகள் ஐஸ்வர்யா டைரக்ட் செய்யும் லால்சலாம் மற்றும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள  ‘ஜெயிலர்’ஆகிய படங்களே அவை. ஜெயிலரில்  தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி ஜெயிலர் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.Continue Reading

  • Top News,  சினிமா,  

தன் குடும்பத்தின் கஷ்டங்களை போக்குவதற்காக பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு சினிமாவுக்கு வந்தவர் ஷகீலா. கதாநாயகியாக நடிக்க விரும்பிய அவருக்கு தமிழில் துண்டு துக்கடா வேடங்களே கிடைத்தன. அதுவும் கவர்ச்சி வேடங்கள். 90 களில் கவுண்டமணி போன்ற காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த ஷகிலா,சில்க் ஸ்மிதாவுக்கு ‘டூப்’பாக சில படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் காலூன்ற ஆரம்பித்த பின் ஷகீலாவின் சந்தை நிலவரமே வேற லெவலுக்கு சென்றது. ஷகீலா நடித்த படங்கள்Continue Reading

  • Top News,  இந்தியா,  விவசாயம்,  

தக்காளி விளையும் நிலத்தில் தங்கம் கிடைக்குமா? விவசாயி ஒருவருக்கு கிடைத்துள்ளது. நாடு முழுவதும் தக்காளி விலை உச்சம் தொட்டுள்ளது. ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. இன்னும் சில நாட்களில் 300 ரூபாயை எட்டும் என பகீர் தகவல் பரவி வருகிறது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயி ஒருவர் தக்காளி விற்று ஒரே மாதத்தில் கோடீஸ்வரராகியுள்ளார். அவர் பெயர் துக்காராம் பாகோஜி . புனே மாவட்டம்Continue Reading

  • Top News,  சினிமா,  

  இயக்குநர் விக்ரமனிடம் உதவியாளராக பணியாற்றியவர் ராஜகுமாரன். இவர், சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரியின் தயாரிப்பில் உருவான “நீ வருவாய் என” படம் மூலம் டைரக்டராக அறிமுகம் ஆனார். அஜித், பார்த்திபன்,தேவயானி ஆகியோர் நடித்திருந்த அந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது இந்த படத்தின் படப்பிடிப்பின் போதுதான் தேவயானிக்கும் இயக்குனர் ராஜகுமாரனுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு இந்த காதல் தம்பதி, சென்னையில் விக்ரமன் வீட்டுக்கு எதிரேContinue Reading

  • Top News,  

“அறச்சீற்றம் கொண்டு கண்ணகி எரித்திட்ட மதுரை நகரத்தில், லட்சக்கணக்கான நூல்கள் கொண்ட இந்த நூலகத்தினால் அறிவுத் தீ பரவப் போகிறது என்று கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மு.க. ஸ்டாலின் மதுரையில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள் என நான் அடிக்கடி சொல்வது,Continue Reading

  • Top News,  Uncategorized,  

மதுரையில் ரூ.206 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பல்வேறு அடுக்குகளாக தமிழகத்தில் நடத்தப்படுகிறது. தமிழக அரசு, தி.மு.க.மற்றும் கலைஞர் மீது பற்றுள்ள தன்னார்வலர்கள் என பல தரப்பினர் பல விதங்களில் கலைஞரை கொண்டாடுகிறார்கள். கருணாநிதி,புத்தகங்களின் காதலர். அவரது ஆழமான வாசிப்பும், படைப்பாற்றலும் தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். பள்ளிப்பருவத்தில் எழுதContinue Reading

  • Top News,  

*மதுரையில் பிராண்டமான கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… 3 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்களுடன் ஏராளமான சிறப்புப் பிரிவுகள். *கல்வியும், சுகாதாரமும் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள்… கலைஞர் நூற்றாண்டு நூலகம் தென் தமிழ்நாட்டின் அறிவாலயம் என மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு. *சொன்னது மட்டுமின்றி சொல்லாததையும் செய்வான் இந்த ஸ்டாலின் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் சென்னையில்Continue Reading

  • Top News,  இந்தியா,  தமிழ்நாடு,  

ஜுலை,15- இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தனிநபர்கள் உள்ளிட்டோரிடம்  கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி தலைமையிலான இந்தியாவின் 22-வது சட்ட ஆணையம் கருத்துகளை கேட்டிருக்கிறது. தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சட்ட  ஆணையத்துக்கு அனுப்பிய அறிக்கையில் பொது சிவில் சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து இருந்தார். திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள்Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

மக்களவை தேர்தல் வெற்றிக்கு தென் மாநிலங்களைத்தான் மலை போல் நம்பிக்கொண்டிருக்கிறது  காங்கிரஸ் கட்சி. உத்தரபிரதேசம், மே.வங்காளம் போன்ற பெரிய மாநிலங்களில் அந்த கட்சிக்கு வாய்ப்பே இல்லை. உ.பி.யில் சோனியா ஜெயிக்கலாம். மம்தா கோட்டையில், காங்கிரசின் அடித்தளம் ரொம்பவும் பலவீனமாக இருக்கிறது. பீகார், மகாஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கூட்டணி கட்சிகளை நம்பியே காங்கிரஸ் உள்ளது ராஜஸ்தான், சத்தீஷ்கர்,இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் இருந்தாலும் ,மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றி கிடைக்கும் எனContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஜுலை,15- இன்று( ஜுலை 15 ) பெருந்தலைவர் காமராஜரின் 120- வது பிறந்தநாள். அவரை, தமிழ்த்திரை உலக ஜாம்பவான்களான சிவாஜியும் கண்ணதாசனும் உயிருக்கு உயிராக நேசித்தனர். கடைசி காலம் வரை பூஜித்தனர். இருவருமே தங்கள் படங்களில் காமராஜர் புகழ் பாட தவறுவதில்லை. ஒரு சில பாடல்கள் இங்கே. 1971- ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோற்றுப்போனது. கட்சி தொண்டர்களை உயிர்ப்புடன் இருக்கச்செய்வதற்காக காமராஜர் புகழ்பாடி கண்ணதாசன்’ பட்டிக்காடா !Continue Reading