• Top News,  சினிமா,  தமிழ்நாடு,  

தமிழ்நாட்டில் தனியார் பேருந்தின் முதல் ஓட்டுநர் கோவை சர்மிளாவுக்கு உலக நாயகன் கமல்ஹாசன் கார் ஒன்றை பரிசாக வழங்கி தன் பெருந்தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறார். தனியார் பேருந்து ஓட்டுநராக 24 வயது சர்மிளா சில மாதங்கள் முன்பு பணியாற்ற தொடங்கியது முதலே அவருக்கு பாரட்டுகள் குவிந்து வந்தன. வலை தளங்களில் அவரை முன் மாதிரி பெண் என்று அனைவரும் புகழந்துப் பேசினார்கள். சர்மிளாவை பாராட்டு வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்Continue Reading

  • Top News,  சினிமா,  

படத்தை அடுத்து விஜயும், இயக்குநர் லோகேஷ் கனகராஜும் இணையும் இரண்டாவது படமான ‘லியோ’ 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிர்மாண்டமாக தயாராகியுள்ளது. இன்னும் 6 நாட்கள் தலக்கோணத்தில் ஷுட்டிங் நடத்தி விட்டால் படத்தின் ஆயுத பூஜை  தினத்தன்று படத்தை ரிலீஸ் செய்ய திட்டம். கதாநாயகியாக த்ரிஷா நடிக்கிறார் . கேங்ஸ்டர் படமான லியோவில் இந்தி நடிகர் சஞ்சய்தத், அர்ஜுன்,மன்சூரலிகான், இயக்குநர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் ,பாபு ஆண்டனி ஆகியContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாசு அரசு பேருந்து போக்குவரத்துக் கழகங்கள் படிப்படியாக முடங்கிவருவதாக எச்சரிக்கை மணி அடித்து உள்ளார். அவருடைய அறிக்கை வருமாறு…. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் விரைவுப் போக்குவரத்துக் கழகம், மாநகரப் போக்குவரத்துக்கழகம் உள்ளிட்ட 8 அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களில் 600 முதல் 700 பணியாளர்கள் அடுத்த சில நாட்களில், அதாவது ஜூன் 30-ஆம் நாளுடன் ஓய்வு பெற இருப்பதாக ஊடகங்களில்Continue Reading

  • Top News,  சினிமா,  

கதாநாயகர்களின் பிம்பத்தை கட்டமைப்பதில் தூண்களாக இருப்பவர்கள் வில்லன்கள். சினிமாக்களில் எதிர்மறை கதாபாத்திரங்களின் வலிமையும், கொடுமையும்தான், ஹீரோக்களை,ரசிகர்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு செல்கிறது. எம்.ஜி.ஆருக்கு நம்பியார். ரஜினிக்கு ரகுவரன். அதுபோல் பிரகாஷ்ராஜ், பல நாயகன்களின் வெற்றிக்கும், படங்களின் வசூலுக்கும் பிரதான காரணமாக இருந்துள்ளார். அந்த படங்கள் குறித்த சின்ன தொகுப்பு: ஆசை. கே.பாலசந்தரின் மாணவரான வசந்த், வணிக ரீதியாக கொடுத்த பெரிய வெற்றிப்படம் ஆசை. அஜித்தை, உச்சத்துக்கு உயர்த்திய படமும் இதுவே.Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

நிதிப் பரிமாற்ற கணக்கு அறிக்கைகளை முறையாக காட்டாதது தொடர்பாக  பத்தாயிரம் வழக்குகள் தமிழ்நாட்டில் பதியப்பட்டு உள்ளதாக  வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.இந்த வகை வழக்குகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இரு மடங்கு கூடி இருப்பதாகவும் வருமானவரித்துறை கூறியுள்ளது. முறையாக கணக்கு காட்டாத வங்கிகள், சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் தொடர்புடைய முதலீட்டில் ஈடுபட்டுள்ள கூட்டுறவு வங்கிகள், வணிக வங்கிகள், சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளிட்டவைகள்Continue Reading

  • தமிழ்நாடு,  

சென்னையில் கடற்கரை சாலையில்  இரு சக்கர வாகனங்கள் இரண்டு நேருக்கு  நேர் மோதிக் கொண்ட விபத்தில் வட மாநில இளைஞர்கள் இருவர் உயிரிழந்து விட்டனர். சினிமாக் காட்சி  போன்று இந்த விபத்து நிகழந்து உள்ளது. அதி வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் மோதிக் கொண்ட போது இடி இடிப்பது போன்ற சத்தம் கேட்டது. அப்போது தூக்கி வீசப்பட்ட நபர்களில் ஒருவர் எதிரே வந்த கார் மோதி அங்கயே இறந்தார்.மற்றொருContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

இது வரை திரட்டப்பட்ட ஆதராங்கள் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பணப் பறிமாற்றத்தில் மோசடி செய்து இருப்பதற்கான சான்றுகள் உறுதியாகி இருப்பதாக அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் அமலாக்க பிரிவு தாக்கல் செய்து உள்ள பதில்Continue Reading

  • Top News,  இந்தியா,  

கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டம் குருபுராவில் வீடு ஒன்றில் போலீசார் அதிரடி சோதனை நடத்திய போது வாடகைக்கு குடி இருந்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பது தெரியவந்தது.. இவர்கள் வீட்டை வாடகைக்கு எடுத்து கஞ்சா செடி வளர்ப்பது எப்படி என்பது குறித்து ஆன்லைனில் கற்றுக்கொண்டுள்ளனர். பின்னர் ஆன்லைன் மூலம் கஞ்சா செடிக்கான விதைகளை வாங்கியுள்ளனர். வீட்டின் ஒரு அறையில் கூடாரம் அமைத்து ஹைடெக் முறையில் செயற்கையாக சூரியContinue Reading

  • தமிழ்நாடு,  

அமலாக்கத்துறை அதிகாரிகளின் ஆப்பரேசன் குறித்த கலக்கத்தில் திமுக அமைச்சர்கள் உள்ளதாக அதிமுக நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான ஜெயகுமார் ஏளனம் பேசியுள்ளார். சென்னையை அடுத்த புழலில் அதிமுக எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் எம்.ஜி.ஆர். இலவச கணினி பயிற்சி மையம் மற்றும் இ சேவை மையத்தை அவர் திறந்து வைத்தார்.  அப்போது  ஜெயக்குமார் பேசியதாவது.. திமுக ஆட்சியை விதி 356- ஐப் பயன்படுத்தி டிஸ்மில் செய்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். டிஸ்மிஸ் ராசிContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றுது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆனி திருமஞ்சன தரிசனம் நாளை மதியம் நடைபெற உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன தரிசன விழாவும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்தContinue Reading