• Top News,  சினிமா,  

தமிழர் நெஞ்சங்களில் சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கும் கவியரசர் கண்ணதாசனின் 96 ஆவது பிறந்தநாள், இன்று. எழுத்தாளர்,கவிஞர்,பாடலாசிரியர், தயாரிப்பாளர், நடிகர்,மேடைப்பேச்சாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்டவர்,கண்ணதாசன். சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியை சேர்ந்த சாத்தப்பா- விசாலாட்சி தம்பதியின் எட்டாவது குழந்தை கண்ணதாசன். சிறு வயதிலேயே பழனியப்பன் -சிகப்பி தம்பதிக்கு 7 ஆயிரம் ரூபாய்க்கு தத்து கொடுக்கப்பட்ட அவர், பெற்றோர் தனக்கு சூட்டிய முத்தையா எனும் பெயரை பிற்காலத்தில் கண்ணதாசன் என தத்தெடுத்துக்கொண்டார். பிஞ்சுContinue Reading

  • Top News,  விவசாயம்,  

பக்ரித் பண்டிகை நெருங்குவதால் ஆடுகளின் விற்பனை தமிழ்நாட்டு சந்தைகளில் முழுவீச்சில் நடைபெறுகிறது. திருப்பூர் மாட்டம் குண்டடத்தில் இன்றைய வாரச்சந்தையில்           3 கோடி ரூபாய் மதிப்புக்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளன. கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் காலையிலயே குவிந்திருந்தனர். அதற்கேற்ப கிராமப் புறங்களில் இருந்து ஏராளமான ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். வழக்கமான நாட்களில் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் ஆடுகள் 15Continue Reading

  • Top News,  இந்தியா,  

கொச்சி.. ஜுன்,-24. கேரள மாநிலத்தின் பல்வேறு இடங்களில சுமார் 10 முக்கிய யூ டியூப் வலைப்பதிவாளர்கள் மற்றும் காட்சி உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இவர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எர்ணாகுளம், பத்தனம்திட்டா திருச்சூர், ஆலப்புழா, கோட்டயம் மற்றும் காசர்கோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ஆலுவாவில்Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

அமைச்சர் செந்தில் பாலாஜியை தங்கள் காவலில் எடுத்து அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியுமா என்ற கேள்விதான் அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகி உள்ளது. வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த வழக்கில் கடந்த 12- ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி திடீரென உடல் நலக் குறைவு காரணமாக முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவரை இந்த மாதம் 28- ஆம் தேதிContinue Reading

  • சினிமா,  

ஆதரவற்று உயிரிழந்தோர் உடல்களை அடக்கம் செய்து வரும் சமூக சேவகருக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆம்புலன்ஸை நடிகர் ரஜினிகாந்த பரிசாக வழங்கியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மணிமாறன் என்பவர் கடந்த 21 ஆண்டுகளாக ஆதரவில்லாமல் அனாதையாக இறந்துவிடுகிறவர்களின் உடலை அடக்கம் செய்து வருகிறார். இதனை அறிந்த நடிகர் ரஜினிகாந்த் மணிமாறனைப் பற்றி விசாரித்து அவருக்கு தேவைப்படும் ஆம்புலன்சுக்கான முழு பணத்தையும் ஷோ ரூம் ஒன்றில் கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்தContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டம் நம்பிக்கை தருவதாகவும், பாஜக-வை வீழ்த்த வேண்டும் என்பதே இலக்கு என்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில் 15 எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட மாபெரும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதுContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

கோவையில் தனியார் பேருந்தின் பெண் ஓட்டுநர் சர்மிளா வேலையில் இருந்து விலகியது பெரிய செய்தியாகி உள்ளது. அவருக்கு உதவுவதாக  நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உறுதி அளித்திருக்கிறார். கோவையைச் சேர்ந்த 24 வயது சர்மிளா, வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தின் டிரைவராக பணியாற்றி வந்தார். தமிழ் நாட்டில் தனியார் பேருந்தின் முதல் பெண் டிரைவர் என்பதால் சர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது.Continue Reading

  • தமிழ்நாடு,  

தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் உதய்சங்கருக்கு சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. “ஆதனின் பொம்மை” என்ற நாவல் எழுதியதற்காக உதயசங்கருக்கு இந்த விருது கிடைத்து உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1960-ம் ஆண்டு பிறந்தவர். நீலக்கனவு, யாவர் வீட்டிலும், பிறிதொரு மரணம் உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளை அவர் வெளியிட்டு இருக்கிறார். தமிழர்களின் தொன்மை, நாகரிகம் குறித்து எழுதப்பட்ட நாவலுக்கு விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி என எழுத்தாளர் உதயசங்கர் தெரிவித்துள்ளார்.Continue Reading

  • Top News,  இந்தியா,  

ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக நாடு தழுவிய அளவில் ஒன்றுப்பட்டுச் செயல்படுது என்று பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அடுத்தக் கூட்டத்தை சிம்லாவில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் மாநில முதலமைச்சருமான நிதீ்ஷ்குமார் கடந்த பல மாதங்களாக கடுமையான முயற்சிகளை செய்து இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார. பாட்னாவில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைContinue Reading

  • தமிழ்நாடு,  

பல்வேறு இடங்களுக்கு வாகனங்களில் செல்வோர் தங்கும் இடங்களில் ஓட்டுநர்களுக்கு அறை வழங்கவேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மாவிற்கு தலைமைச்செயலர் இந்தக் கடிதத்தை அனுப்பியிருக்கிறார். வாகனங்களில் செல்வோர் அறைகளில் தங்கும் நிலையில் வாகன ஓட்டுநர்கள் வராண்டா, வாகனத்தில் தூங்குகின்றனர். இரவு நல்ல தூங்கினால்தனே பகலில் சோர்வு இன்றி காரை ஓட்டமுடியும் என்பது கூட அவர்களைContinue Reading