• Top News,  இந்தியா,  தமிழ்நாடு,  

பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவராக உள்ள அண்ணாமலையை மத்திய பாதுகாப்பு அமைச்சரும் அந்தக் கட்சியின் முன்னணி தலைவருமான ராஜ்நாத் சிங் வானளவா புகழ்ந்து அவரை உச்சிக் குளிரச் செய்துள்ளார். கடந்த வாரம் சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழ்ந்து பேசியதே அண்ணாமலைக்கு கிடைத்த பெரிய மகுடமாக கருதப்பட்டு வரும் நேரத்தில் இப்போது ராஜ்நாத் சிங்கும் அவரை மனம் விட்டுப் பாராட்டி இருக்கிறார். சென்னை அடுத்த தாம்பரத்தில் நரேந்திரContinue Reading

  • தமிழ்நாடு,  

பாரதீய ஜனதா கட்சியின் மாநில தகவல் தொழில் நுட்பப் பிரிவுச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யாவுக்கு மதுரை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மீதும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் ட்விட்டரில் பதிவிட்ட வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்ட அவர் மதுரை கொண்டு சென்று சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சூர்யாவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய போலிஸ் தரப்பு மனுContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

பாரதீய ஜனதா கட்சியை மீண்டும் ஆள விடுவது இந்தியாவுக்கு ஆபத்தாக முடியும் என்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். அவர், திருவாரூர் அடுத்த காட்டூரில் 12 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு உள்ள கலைஞர் கோட்டைத்தை திறந்து வைத்து பேசுகையில் இவ்வாறு கூறினார். கோட்டத்தை திறந்து வைப்பதற்கு வருவதாக இருந்த பீகார் முதலைமச்சர் நிதீஷ்குமார் உடல் நலக் குறைவு காரணமாக கடைசி நேரத்தில் பயணத்தை ரத்துContinue Reading

  • இந்தியா,  தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

June 20,23 சமூகநீதிக்காக பாடுபட்டவர் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி என்று பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் புகழாரம் தெரிவித்துள்ளார்.   திருவாரூரில்  கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பங்கேற்ற  அவர் முத்துவேலர் நினைவு நூலகத்தை திறந்து வைத்தாார். பின்னர் பீ அவர் பேசியதாவது: சமூக ஏற்ற தாழ்வுகளை களைத்தவர் தான் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களை – வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவருடைய பாதுகாப்பு காரணங்களுக்காக  விமான நிலையத்தில் விமானம் நிற்கும் இடம் வரை சொந்த காரிலேயே செல்வதற்கான சிறப்பு அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த அனுமதி கிடைத்து உள்ளதை அடுத்து அவர், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் விமானம் நிறுத்தப்பட்டு இருக்கும் இடம் வரை தனது காரிலேயே செல்வதற்கான வாய்ப்பைப் பெற்று இருக்கிறார். பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு இந்த அனுமதியைContinue Reading

  • தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

June 20, 23 ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு மாதத்திற்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் நடைமுறை அமலுக்கு வரும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால கடந்த வாரம் கைது செய்யப்பட்டதால் அவர் வகித்து வந்த துறைகள் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்துContinue Reading

  • Top News,  சினிமா,  தமிழ்நாடு,  

JUNE 20,23   மாமன்னன் படத்துடன் நடிப்பதை விட்டு விலக முடிவு செய்திருக்கும் ப் உதயநிதி ஸ்டாலினுக்கு ஏஞ்சல் மூலம் புதுப் பிரச்சனை ஏற்ப்பட்டு உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமான்னன் படத்தில் நடித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். வைகைபுயல் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. இந்நிலையில்Continue Reading

  • Top News,  சினிமா,  தமிழ்நாடு,  

June 20, 23 நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் கனியுமா? அல்லது காயாகுமா? என்பதை காலம் கணித்து சொல்ல வேண்டும் என்று  கவிப்பேரரசு வைரமுத்து கூறியுள்ளார். நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்குச் சென்றிருந்த கவிப்பேரரசு வைரமுத்து  கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த குறிப்பேட்டில்,  “நமக்கு நாமே பயணத்தினை தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்த்தினை பெற்று தொடங்கிய மு.க.ஸ்டாலினின்Continue Reading

  • தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

June 20, 23 விஜய் அரசியலுக்கு வருவது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். தமிழக அரசியமலை சுத்தப்படுத்த யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் எனவும் அண்ணாமலை கூறியுள்ளார். நடிகர் விஜய் கடந்த சனிக்கிழமை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை சந்தித்து அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கினார். சென்னை நீலாங்கரையில் நடைபெற்றContinue Reading

  • தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

June 20, 23 அரசின் அனைத்து வரி மற்றும் கட்டணங்கள் ஏற்கனவே உயர்த்தப்பட்ட நிலையில், சாலை வரியை உயர்த்த திமுக அரசு முடிவெடுத்து உள்ளது கண்டனத்திற்க்கு உரியது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள  அறிக்கை வருமாறு, “‘விடியல் தருவோம்’ என்று கூறி ஆட்சியைப் பிடித்த விடியா திமுக அரசு, சாலை வரியை 5 சதவீதம் அளவிற்கு உயர்த்துவதற்கு முடிவெடுத்துள்ளதாக அனைத்து நாளிதழ்களிலும் வெளிவந்துள்ள செய்தி,Continue Reading