ஜனவரி-18.
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக 900 நாட்களுக்கு மேலாக போராடி வரும் கிராம மக்களை சந்திக்க விரும்பும் நடிகர் விஜய்க்கு கடுமையான கட்டுப்பாடுகளை போலீஸ் விதித்து உள்ளது.
காஞ்சிபுரம் அருகே பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராம விவசாய நிலங்களை புதிய விமான நிலையம் அமைப்பதற்கு கையகபப்படுத்தும் தமிழக அரசின் முயற்சிக்கு எதிராக அந்த கிராம மக்கள் நெடிய போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவிப்பதற்கு நடிகா் விஜய் அங்கு செல்வதற்கு அனுமதி கேட்டு தவெக நிர்வாகிகள் காவல்துறையிடம் மனு கொடுத்திருந்தனர்.
இதற்கு பதிலளித்து உள்ள காவல் துறை குறிபி்ட்ட வாகனங்களில்தான் செல்ல வேண்டும், குறிப்பிட்ட நேரந்தான் அங்கு இருக்க வேண்டும், ஏழு கிராமத்து மக்களை மட்டுேம சந்திக்க வேண்டும என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.
கடந்த அக்டோபரில் விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்கும் நடிகர் விஜய்க்கு ஏராமான கட்டுப்பாடுகளை காவல் துறை விதித்தது குறிப்பிடத்தக்கது.
*