May 12, 2023
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. results.cbse.nic.in என்ற இணையதளத்தில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை 6,759 மையங்களில் நடந்த தேர்வை சுமார் 16.9 லட்சம் மாணவர்கள் எழுதினர். 87.33% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 5.38% குறைந்துள்ளது. அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.91%, பெங்களூருவில் 98.64%, சென்னை மண்டலத்தில் 97.40% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில் யார் முதலிடம், 2ம் இடம், 3ம் இடம் என்பதை சிபிஎஸ்இ அறிவிக்கவில்லை. மாணவர்களிடம் தேவையற்ற போட்டியை தவிர்க்க யார் முதலிடம், 2ம் இடம்,3ம் இடம் விவரத்தை வெளியிடவில்லை.