நான் தமிழ் மொழியை, தமிழ் கலாசாரத்தை நேசிக்கிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரெயில் நிலையம், பல்லாவரம் ராணுவ மைதானம், சென்னை விவேகானந்தர் இல்லம் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். ரூ.1,260 கோடி செலவில் சர்வதேச தரத்தில் அழகிய வடிவில் கட்டப்பட்டுள்ள சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
சென்னை – கோவை இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்த பின் பிரதமர் மோடி விவேகானந்தர் இல்லம் நோக்கி காரில் புறப்பட்டார். விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். அங்குள்ள விவேகானந்தர் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசாக விவேகானந்தர் சிலை வழங்கப்பட்டது. விழாவில் பேசிய பிரதமர் மோடி நான் தமிழ் மொழியை நேசிக்கிறேன். ராமகிருஷ்ண மடத்தை பெரிதும் மதிக்கிறேன். எனது வாழ்க்கையில் ராமகிருஷ்ண மடம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. நான் தமிழ் மொழியை, தமிழ் கலாசாரத்தை நேசிக்கிறேன் என கூறினார்.