ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. ‘விடாமுயற்சி’ யை தொடர்ந்து’ அல்டிமேட் ஸ்டார்’ அஜித், நடித்துள்ள படம். அவருடன், திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடிக்கிறார். வரலாறு படத்துக்குப்பிறகு அவர் மூன்று வேடத்தில் நடிக்கும் , இந்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
இதன் டீசரை தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்டது.
‘மாமே… கோடை கொண்டாட்டத்துக்கு சூப்பர் கிரேசியாக ஒரு படம் ..இது வேற லெவல்’என்ற ‘பில்டப்’ புடன் வெளியான டீசர், அமர்க்களமாகவே உள்ளது.
‘ ஏகே ஒரு ரெட் டிராகன்… அவன் போட்ட ரூல்ஸை அவனே பிரேக் பண்ணிட்டு வந்திருக்கான்னா, அவன் மூச்சுலயே முடிச்சுடுவான் ’ என்று யாரோ சொல்வதுபோல் தொடங்குகிறது, அந்த டீசர்.
இதனை தொடர்ந்து அஜித் அறிமுகம். ‘நாம எவ்ளோ ‘குட்’டா இருந்தாலும்… இந்த உலகம் நம்மள ‘பேட்’ ஆக்குது’ என அவருக்கே உரிய தொனியில் பேசுகிறார்.
அப்போது ஒரு பீப் சவுண்ட் வருகிறது. பிறகு ‘காட்றேன்…’ என டீசரில் முடிக்கிறார் அஜித்.
.இதுபோல் படம் நெடுகிலும் ‘பஞ்ச்’ வசனங்கள் உள்ளதாம்.
பொங்கல் திருநாளில் வந்திருக்க வேண்டிய ‘குட் பேட் அக்லி’, அடுத்த மாதம் 10 ஆம் தேதி உலகம் எங்கும் ரிலீஸ் ஆகிறது.
—