டிசம்பர்-24.
சாதாரண பாப்கானுக்கு மூன்று வகையான வரியை இந்திய ஜி.எஸ்.டி. கவுன்சில் விதித்து இருப்பது நாடு முழுவதும் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

பாப்கானில் மசலா கலந்திருக்கலாம், ஆனால் அதற்கான கவரில் நிறுவனத்தின் பெயர், முத்திரை போன்றவற்றை போடாமல் இருந்தால் அதற்கு வரி 5% ஜி.எஸ்.டி.

பாப்கானில் மசாலாவும் கலந்து அதற்கான கவரில் கம்பெனி பெயர் போடப்பட்டு இருந்தால் அதற்கு வரி 12% ஆகும்.

இன்னொரு வகையான கேரமல் பாப்கான் அதாவது சர்க்கரை பூசப்பட்ட பாப்கானுக்கு வரி 18% என்றும் இரு தினங்கள் முன்பு கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் தீர்மானித்து இருக்கிறது.

இந்த புதிய வரி விதிப்பு உடனடியாக அமுலுக்கு வருகிறது ஜி்எஸ்டி கவுன்சில் பாப்கானை மூன்று வகைகளாகப் பரித்து விரிவிதித்து இருப்பதை ஏளனம் செய்து சமூக ஊடகங்களில் ஏரளாமான தகவல்கள் பரவிவருகின்றன.

அரசாங்கத்தின் இந்த செயலை பிரபல பொருளாதார நிபுணர்களும் கடுமையாக விமர்சனம் செய்து உள்ளனர். முன்னணி பொருளாதார வல்லுநரான அரவிந்த் சுப்பிரமணியம் , “பாப்கானுக்கு மூன்று வகையான வரிகை விதித்து இருப்பது நாட்டில் முட்டாள்தனம் அதிகரித்து இருப்பதைக் காட்டுகிறது. வரி செலுத்தும் முறையை எளிதாக்குவதற்குப் பதிலாக ஜிஎஸ்டி கவுன்சில் கடுமையாக்கி உள்ளது” என்று விமர்சனம் செய்து உள்ளார்.

கோயம்புத்தூரில் இரண்டு மாதங்களுக்கு முன்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பன்பட்டார் ஜாம்-க்கு விதிக்கப்பட்டுள்ள இரண்டு வகையான வரியை அண்ணபூர்ணா ஓட்டல் உரிமையாளர் விமர்சனம் செய்தது பெரும் வரவேற்றை பெற்றது.உடனே அவரை அழைத்து மன்னிப்புக் கேட்கச் செய்தனர். அந்த செயலும் பெரும் கண்டனத்தைப் பெற்றது.

அதனால்தான் என்னவே பாப்கார்ன் வரி மீதான விமர்சனத்திற்கு மத்திய நிதி அமைச்சகம் எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் காக்கிறது.
*