நகைச்சுவை நடிகை பிந்துகோஷின் கடைசி நாட்கள் பெரும் போராட்டமாக இருந்து உள்ளன. பிறரை சிரிக்க வைத்தவர் போதிய பணம் இல்லாத்தால் பரிதாபமாக இறந்துவிட்டார். அவருக்கு வயது 76.
மனோரமா , கோவை சரளா வரிசையில் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நகைச்சுவை நடிகை , பிந்துகோஷ்.
களத்தூர் கண்ணம்மா படத்தில் கமலஹாசனுடன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்,
இயற்பெயர் விமலா,
சினிமாவுக்காக, பிந்துகோஷ், என மாற்றிக்கொண்டார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா, ரஜினிகாந்த் ,கமல்ஹாசன் உள்ளிட்ட
உச்ச நட்சத்திரங்களுடன் நடித்தவர்.
குண்டான தோற்றம், வெகுளியான நடிப்பு என மக்களை கவர்ந்தவர்.
நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
வயது மூப்பு காரணமாக அவருக்கு உடலில் பல பிரச்சினைகள் இருந்தன. மருத்துவ உதவி கிடைக்காமல், வறுமையில் அவதிப்பட்டு வந்தார்.
நடிகர் விஷால், பிந்து கோஷ் சிகிச்சைக்கு பணம் கொடுத்திருக்கிறார். எனினும் சிகிச்சைக்கு பணம் போதவில்லை.
கடைசியாக அவர் அளித்த பேட்டியில், ‘தூங்காதே தம்பி தூங்காதே பட சூட்டிங்கின்போது, வயிறு பெரிதாக உள்ளதால், பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, 13 கிலோ சதையை எடுத்தேன். அந்த சர்ஜரிதான் நான் செய்த தவறு. இதற்கு பிறகு BP, சுகர். வரிசை கட்டி வந்தன- ஹார்ட் ஆபரேஷன் செய்தேன் – இதற்கு பிறகு சிகிச்சை செய்ய வசதியில்லை’ என சொல்லி இருந்தார்.
சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், பிந்துகோஷ் .
சிகிச்சை பலனின்றி பிந்துகோஷ் நேற்று மரணம் அடைந்தார்.
இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
—