June 20, 23
தமிழக அரசு சாலை வரி விதிப்பை உயர்த்த இருப்பதால் புதிய வாகனங்களின் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 2022-2023 ஆம் ஆண்டில் 14.77 லட்சம் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 12.47 லட்சம் வாகனங்கள் இரு சக்கர வாகனங்கள் ஆகும்.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் தமிழக அரசு சாலை போக்குவரத்து வரியை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, ரூ.1 லட்சம் வரையிலான வண்டிகளுக்கு 10% வரியும், ரூ.1லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களுக்கு 12% வரியும் விதிக்கப்பட உள்ளது.
மேலும், 5 லட்சத்திற்கு குறைவான கார்களுக்கு 12 சதவீதம் வரை வரி உயர்வும் , 5 முதல் 10 லட்சம் வரையிலான கார்களுக்கு 13 சதவீதம் வரை வரி உயர்வும், 10 முதல் 20 லட்சம் வரையிலான கார்களுக்கு 15 சதவீதம் வரையும் அதிகரிக்கப்பட இருக்கிறது. அதற்கு மேல் உள்ள வாகனங்களுக்கு 20 சதவீதம் வரையும் சாலை வரிகள் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வரி உயர்வு மூலம் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் விலை 5 சதவீதம் வரை உயரும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. அரசுக்கு தற்போது வாகன வரிகள் மூலம் ரூ 6,674 கோடி வருவாய் கிடைக்கிறது. விரி உயர்வு அமலுக்கு வந்தர் 1,000 கோடி ரூபாய் வரை அதிமாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
000