மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 18 ஆண்டுகளாக தக்காராக இருந்த கருமுத்து கண்ணன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 70.
கருமுத்து தி. கண்ணன், கருமுத்து தியாகராஜர் – இராதா தம்பதியரின் ஒரே மகன். இவர் மதுரை தியாகராசர் கலைக்கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி மற்றும் தியாகராசர் மேலாண்மைக் கல்லூரி மற்றும் பல கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் நிர்வாகியாகவும் செயல்பட்டுள்ளார். பல நூற்பாலைகளின் தலைவராகவும் உள்ளார். மேலும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தக்கார் ஆகவும் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் இன்று காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.