மு.க.ஸ்டாலினுக்கு நெல்லை தரும் தொல்லைகள்.. திமுகவிடம் நீதி கேட்கும் கிறித்தவர்கள்.

தி.மு.க. ஒரு ஜனநாயக இயக்கம்.இதனால் அனைத்து மாவட்டங்களிலும் கோஷ்டி பூசலுக்குப் பஞ்சம் இருக்காது.

நெல்லையில் கொஞ்சம் அதிகமாகவே உள்கட்சி மோதல் உண்டு.பிரச்சினை  பெரிதாகி வெடிக்கும் போது மேலிடம் தலையிட்டு தீர்த்து வைக்கும். திருநெல்வேலி சீமைக்கு கருணாநிதி வரும் போதெல்லாம் இதனை குறிப்பிடத் தவறுவதில்லை.‘நெல்லை எனக்கு தொல்லை’ என அவர் வேடிக்கையாக செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொள்வார். சமயங்களில் மேடைகளிலும் சொல்வதுண்டு.

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னரும் இந்த நிலையே தொடர்கிறது.சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க.வின் நெல்லை மத்திய மாவட்ட செயலாளராக அப்துல் வகாப் இருந்தார்.இவர் பாளையங்கோட்டை எம்.எல்.ஏ.வும் ஆவார்.ஆரம்பத்தில் அனைத்து தரப்பினரையும் அரவணைத்து சென்ற அப்துல் வகாப், போகப்போக தனிக்கோஷ்டியை உருவாக்கினார்.நெல்லை மாநகராட்சி பணிகளில் மூக்கை நுழைத்தார்.இதனால் மேயர் சரவணனுக்கும், அப்துல் வகாப்புக்கும் இடையே மோதல் வலுத்தது வகாப்புக்கும் இடையே மோதல் வலுத்தது.

வகாப்புக்கு எதிராக மேயர் சரவணன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன் கான்,முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலைராஜா,லட்சுமணன் உள்ளிட்டோர் கை கோர்த்தனர்.கே.என்.நேருவிடமும், துரைமுருகனிடமும் அப்துல் வகாப் குறித்து நீண்ட புகார் பட்டியல் அளித்தனர்.இதனையடுத்து அப்துல் வகாப், செயலாளர் பொறுப்பில் இருந்து தூக்கியடிக்கப்பட்டார்.மாவட்டப் பொறுப்பாளராக மைதீன்கானை மேலிடம் நியமித்தது.

அப்துல் வகாப் விவகாரம் தீர்த்து வைக்கப்பட்ட நிலையில், நெல்லை தி.மு.க. எம்.பி.ஞானதிரவியம் வடிவத்தில் தி.மு.க. தலைமை இன்னொரு பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

நெல்லை சி.எஸ்.ஐ. டயோசீசனில் இரு தரப்புக்கு இடையே சில தினங்களாக பிரச்சினை இருந்து வருகிறது.திருச்சபை பேராயர் பர்னபாசுக்கும், எம்.பி.ஞானதிரவியத்துக்கும் இடையேயான மோதல் அண்மையில் அடிதடி வரை சென்றுள்ளது.

பேராயர் பர்னபாசின் ஆதரவாளர் காட்பிரே நோபுள். மத போதகர்.இவர் இரு தினங்களுக்கு முன்பு எதிர் கோஷ்டியால் அடித்து துவைக்கப்பட்டார்.ரத்தம் சொட்ட  சொட்ட  நோபுள், நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசில் அவர்  அளித்த புகார் மனுவில் ‘’ ஞானதிரவியம் எம்.பி. தூண்டுதலின் பேரில்தான் என் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ஞானதிரவியம் உள்ளிட்ட 33 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.எந்த நேரத்திலும் ஞானதிரவியம் கைது செய்யப்படலாம் என்ற சூழலில் அவருக்கு திமுக.பொதுச்செயலாளர் துரைமுருகன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

’உங்கள் செயல் கட்சிக்கு குந்தகம் விளைவிப்பதாக உள்ளது. இது குறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்’ என நோட்டீசில் துரைமுருகன் கண்டிப்பு காட்டியுள்ளார். இது, மதரீதியிலான விவகாரம் என்பதால் ஞானதிரவியம் மீது முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஞானதிரவியம் மீது கட்சி மேலிடம் கடும் நடவடிக்கை எடுக்கும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

‘’ கிறிஸ்துவ திருமண்டல அலுவலகங்களை ரவுடிகள் துணையுடன் பூட்டுப்போட்ட ஞானதிரவியத்தை கைது செய்’ என கிறிஸ்துவ அமைப்பு நிர்வாகிகள் , சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதால் நெல்லையில் ஞானதிரவியம் விவகாரம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *