மோகன்லால் படம் ரிலீஸ் ஆகும் தேதியில் , மலையாள சினிமா உலகம்‘ஸ்டிரைக்’ கை அறிவித்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள் ஜுன் மாதம் 1-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
கேளிக்கை வரியை மாநில அரசு குறைக்க வேண்டும், நடிகர்கள் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்பது, அவர்கள் பிரதான கோரிக்கை.
இந்த போராட்டத்துக்கு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளை உள்ளடக்கிய கேரள திரைப்பட வர்த்தக சபை ஆதரவு அளித்துள்ளது.
‘ஸ்டிரைக்’ கை அங்குள்ள நடிகர்கள் ஏற்கவில்லை. தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினரும் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் ஆண்டனி பெரும்பாவூர். இவர் , மோகன்லாலை வைத்து தொடர்ச்சியாக படம் தயாரிப்பவர் .
வேலை நிறுத்தத்தை அறிவித்த திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் துணை தலைவர் சுரேஷ்குமார் , மீது ஆண்டணி பெரும்பாவூர் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
இந்த நிலையில் அடுத்த மாதம் 27 -ஆம் தேதி அன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்த கேரள திரைப்பட வர்த்தக சபை திட்டமிட்டுள்ளது.
அன்றுதான் மோகன்லால் நடித்துள்ள ‘L2 எம்புரான்’ திரைப்படம் உலகம் முழுக்க ரிலீஸ் ஆகிறது.இந்த படம் பெரும் வெற்றி பெற்ற லூசிபர் ‘படத்தின் இரண்டாம் பாகம் ஆண்டனி பெரும்பாவூர் மீதான கோபத்தை, மோகன்லால் மீது, திரைப்பட வர்த்தக சபை காட்டி இருப்பது,, மலையாள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோகன்லால் படம் வெளியாகும் நாளில் வேலை நிறுத்தம் நடத்துவது, ஒட்டு மொத்த மலையாள நடிகர்கள் மீதான, தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது.
‘எம்புரான் ‘ வெளியாகும் நாளில் ஸ்டிரைக் நடத்துவது, மோகன்லால் ரசிகர்களை மட்டுமல்லாமல், அனைத்து தரப்பினரிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
—