மே.24
நாடு முழுவதும் நடத்தப்பட்ட 2022ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வை தமிழ் மொழியில் எழுதி தேர்ச்சி பெற்று தென்காசி இளைஞர் சுப்புராஜ், அகில இந்திய அளவில் 621வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
2022 ஆம் ஆண்டிற்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் ஆகிய பணிக்கு நடத்தப்பட்ட யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இறுதி முடிவுகள் நேற்று வெளியாகின. நாடு முழுவதும் 180 ஐஏஎஸ், 200 ஐபிஎஸ் உள்ளிட்ட 1,022 இடங்களுக்கு நடந்த தேர்வில் மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதில், தென்காசியைச் சேர்ந்த சுப்புராஜ் என்ற இளைஞர் 621வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். தமிழ் மொழியில் யுபிஎஸ்சி தேர்வை எழுதிய சுப்புராஜ், தற்போது டேக்ராடூனில் ஐஎஃப்எஸ் அதிகாரியாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், சென்னையைச் சேர்ந்த ஜீஜீ என்ற மாணவி அகில இந்திய அளவில் 107வது இடம் பிடித்து, தமிழக அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, 117வது இடத்தில் கோவில்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ண சாமி என்பவரும், 118வது இடத்தில் நெல்லை சேர்ந்த சுபாஷ் கார்த்திக்கும், 447வது இடத்தை சென்னையைச் சேர்ந்த மதிவதினி ராவணன் என்பவரும் பிடித்து யுபிஎஸ்சி தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.