நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த் இதனை தொடர்ந்து லால்சலாம் படத்தில் இப்போது நடித்து வருகிறார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டு செய்கிறார்.ரஜினிக்கு இதில் கவுரவ வேடம். கிரிக்கெட்டை கதைக்களமாக கொண்டு திரில்லர் ஜானரில் உருவாகும் லால்சலாமில் விக்ராந்தும், விஷ்ணு விஷாலும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இதன் படப்பிடிப்பு திருவண்ணாமலையில் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. நல்லாம்பாளையம், சத்திரம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரி விடுதியில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் ரஜினி, சனிக்கிழமை திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.தன்னக்காண திரண்டிருந்த ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்தார்.
இந்நிலையில் விடுதியில் தங்கி இருந்த ரஜினியை ,அமைச்சர் எ.வ.வேலு சந்தித்து பேசினார். ரஜினிக்கு திருவள்ளுவர் சிலையை பரிசாக வழங்கினார்; இருவரும் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் திரைப்பட விவகாரங்கள் குறித்து பேசியுள்ளனர். நடிகர் விஜய் அரசியலில் இறங்க ஆயத்தமாகி வரும் நிலையில்,ரஜினியை அமைச்சர் வேலு சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
000