ஜுலை, 20-
தமிழக பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி சென்னை விருகம்பாக்கத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை போலியான ஆவணங்கள் மூலம் விற்பனை ஒப்பந்தம் போட்டு உள்ளதாக எழுந்த புகாரை அடுத்து அந்த ஒப்பந்தத்தை பதிவுத்துறை ரத்து செய்துள்ளது.
பல்வேறு ஊழல் வழக்குகளை அம்பலப்படுத்தி வரும் அறப்போர் இயக்கம், கடந்த ஏப்ரல் மாதத்தில் நயினார் பாலாஜி மீது இது தொடர்பாக குற்றம் சுமத்தி இருந்தது.இந்த சொத்து சென்னையின் முக்கியமான சாலைகளில் ஒன்றான ஆற்காடு சாலையில் விருகம்பாக்கத்தில் உள்ளது.இதன் சந்தை மதிப்பு ரூ 100 கோடிக்கு மேல் ஆகும்.
இதற்கு நயினார் பாலாஜி, முறையான ஆவணங்கள், மற்றும் வாரிசுதாரர்கள் ஒப்புதல் உடன்தான் சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டதாக விளக்கம் கொடுத்திருந்தார். இது பற்றிய புகாருக்கு பத்திரப்திவுத் துறை அமைச்சர் மூர்த்தி, நயினார் பாலாஜி மீதான மோசடிப் புகார் மீது விசாரித்து அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து விசாரணை மேற்கொண்ட சென்னை மண்டல பத்திரப் பதிவுத் துறை நயினார் பாலஜி செய்திருந்த பத்திரப் பதிவை ரத்து செய்து உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
பத்திரப் பதிவுத் துறையின் முடிவு தவறு என்றால் நயினார் பாலாஜி நீதிமன்றத்தை நாடுவதற்கான வாய்ப்பு உள்ளது.
000