வடபழனியில் அஜித் பைக்!

’அல்டிமேட் ஸ்டார்’ அஜித்தை ரசிகர்கள் நேரில் பார்க்க முடியாது. அவர், ஊடகங்களை சந்தித்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது.சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரமாண்ட வீட்டில் அவர் வசிக்கிறார்.பெரும்பாலும் அவர் வீட்டில் இருப்பது இல்லை. உலகம் முழுவதும் பைக்கில் சுற்றிக்கொண்டிருக்கிறார்.

அஜித் நடிப்பில் துணிவு படம் வெளியாகி கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிறது.கடந்த பொங்கலில் அந்தப்படம் ரிலீஸ். அவரது சினிமா போட்டியாளர் விஜய் நடித்த வாரிசு படமும் அன்று தான் ரிலீஸ் ஆனது.

விஜய், அதன் பிறகு லியோ படத்தில் நடித்து முடித்து விட்டார்.அடுத்து வெங்கட் பிரபு படத்தில் நடிக்க உள்ளார்.அஜித், மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி மாதங்கள் பல ஆகிறது.ஷுட்டிங் எப்போது தொடங்கும் என்பது தெரியவில்லை.அவரது ரசிகர்கள் ஏங்கி தவிக்கிறார்கள்.

பைக் மெக்கானிக்காக தனது வாழ்க்கையை தொடங்கிய அஜித்குமாருக்கு பைக்குகள் மீது அலாதி ப்ரியம். ‘துணிவு’ படத்தை முடித்த கையுடன் அவர் பைக் சுற்றுலா சென்றார். அங்கு அவர் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றன. தற்போது கூட அஜித் பைக் டூரில் இருப்பதால் படப்பிடிப்பு தாமதமாவதாக தெரிகிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘திருப்பதி’படத்தில் அஜித் பயன்படுத்திய பல்சர் வண்டியை தங்களது அருங்காட்சியகத்தில் வைத்திருப்பதாக ஏவிஎம் ஸ்டூடியோஸ் அறிவித்துள்ளது. திருப்பதி படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்து இருந்தது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில், “அஜித்குமார் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட். ஏவிஎம் தயாரிப்பில் வெளியான ‘திருப்பதி’ படத்தில் அஜித் பயன்படுத்திய பஜாஜ் பல்சர் 180சிசி, 2004 பைக் ஏவிஎம் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோஸில் அமைக்கபட்டுள்ள ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை முதலமைச்சர்.ஸ்டாலின் திறந்துவைத்தார். இந்த மியூசியத்த்தில் 1960-கள் தொடங்கி தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்பட்ட பைக், கார்கள் உள்ளிட்ட சினிமா தொடர்பான பொருட்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

வட பழனி வாருங்க! அஜித் பைக்கை பாருங்க!

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *