வலி இல்லாத மரண தண்டனை.. அரசு பரிசீலனை

கேபிடல் பனிஷ்மென்ட் எனும் மரணதண்டனை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொருவிதமாக நிறைவேற்றப்படுகிறது.

இந்தியாவில் பெரும்பாலும்கொலையாளிகளுக்கே மரண தண்டனைவிதிக்கப்பட்டு, அவர்கள் உயிர் , தூக்கு மூலமாக பறிக்கப்படுகிறது.

அரபு நாடுகளின் போதைப்பொருள்கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கும் மரணதண்டனை தரப்படுகிறது.

மிகவும் குரூரமாக வாளால் தலையைகொய்து பொதுமக்கள் மத்தியில் இந்ததண்டனைகள் நிறைவேற்றப்படும் .

சில வெளிநாடுகளில் குறைந்த பட்சவலியை தரக்கூடிய வகையில்  மின்சாரம்பாய்ச்சியும், விஷ ஊசி செலுத்தியும் மரணதண்டனை அளிக்கப்படுகிறது.

துப்பாக்கியால் சுட்டும்  இந்த தண்டனையைசில நாடுகள் நிறைவேற்றுகின்றன.

இந்தியாவில் தூக்கில் போட்டுமரணதண்டனையை நிறைவேற்றுகிறார்கள்.

இது, வலி மிகுந்ததாக உள்ளதால்,வலிகுறைவான வகையில் மரண தண்டனையைநிறைவேற்ற உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் ரிஷி மல்ஹோத்ரா என்ற வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நடைபெற்றது.

  • மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சோனியா மாத்தூர், ‘வலி குறைவான மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்குமாறு மத்திய அரசுக்கு, அட்டர்னி ஜெனரல் கடிதம் எழுதியுள்ளார்.இது அரசின் பரிசீலனையில் உள்ளது’’ என தெரிவித்தார்.
Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *