வால்பாறை அருகே காட்டுயானை அட்டகாசம் – சுற்றுலா பயணிகளின் காரைத் தாக்கியதால் அதிர்ச்சி..

மே.3

கோவை மாவட்டம் வால்பாறை அருகே வனப்பகுதிக்குள் சென்ற சுற்றுலா பயணிகளின் வாகனத்தை, அங்கு குட்டியுடன் வந்த காட்டு யானை ஒன்று திடீரென தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை பகுதிக்கு கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. வால்பாறை பகுதியை சுற்றி பார்க்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லம் பகுதியிலிருந்து அணில் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் என மொத்தம் நான்கு பேரும் வாகனத்தில் வால்பாறையை சுற்றி பார்க்க வந்துள்ளனர். வால்பாறை சுற்றி பார்த்துவிட்டு இன்று மலுக்கப்பாறை அதிரப்பள்ளி வழியாக கொல்லம் சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது அதிரப்பள்ளி வனப்பகுதிக்குள், யானை கயா என்ற பகுதியில் யானைகள் வனப்பகுதியில் இருந்து சாலையை கடந்து மறுபக்கம் சென்றுள்ளது. எதிர்பாராத விதமாக வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வந்த யானை காரின் முன்பகுதியை தாக்கி கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியது. இந்த சம்பவத்தை காரில் இருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அப்போது, அவர்களது காருக்கு பின்னால் வந்த வாகனங்கள் ஒலி எழுப்பி யானையை விரட்டினர். இதனையடுத்து யானை வனப்பகுதிக்குள் சென்றது.

நூலிழையில் யானையிடமிருந்து உயிர் தப்பிய 4 பேரும் கொல்லம் பகுதிக்கு சென்றனர். வனப்பகுதி சாலையில் நடைபெற்ற இந்த சம்பவம் வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தாமலும், வன விலங்குகளை தொந்தரவு செய்யாமல் செல்ல வேண்டும் கேரளா வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *