ஜனவரி-03,
அஜித்தின் ‘விடாமுயற்சி’, ஷங்கரின் ‘கேம்சேஞ்சர்’ பாலாவின் ‘வணங்கான்’ ஆகிய மூன்று படங்கள் பொங்கலுக்கு வருவதாக இருந்தன.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களையும், இந்த படங்கள் ஆக்கிரமித்து கொள்ளும் என்பதால், நடுத்தர மற்றும் சின்ன பட்ஜெட் படங்கள் பொங்கலுக்கு தலை காட்ட தயங்கின.
இந்த நிலையில், விடாமுயற்சி, பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது என அதன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து விட்டது. அந்த படத்தை திரையிட இருந்த பல நூறு தியேட்டர்கள் ‘காலி’யாக உள்ளது.
இதனால் உற்சாகம் அடைந்துள்ள நடுத்தர பட்ஜெட் தயாரிப்பாளர்கள், தங்கள் படங்களை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்கள்.
‘கேம் சேஞ்சர்’ வணங்கான்’ தவிர்த்து, மேலும் பல படங்கள் பொங்கல் ஜல்லிக்கட்டில் மோதுவதற்கு தயாராகியுள்ளன.
*