வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, மற்றும் விஜய் சேதுபதி நடித்த விடுதலை படம் கடந்த மாதம் 31 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் அதிகாரபூர்வ முதல் நாள் வசூல் சமீபத்தில் வெளியாகியது. அதன் படி தமிழ் நாட்டில் மட்டுமே 8 கோடி வசூல் செய்திருப்பதாகவும், உலகம் முழுவதும் சேர்த்து 12 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த நிலையில் பல கோடிகள் வசூல் செய்துள்ள இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் சூரியின் சம்பளம் பற்றிய தகவல் ஷோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் சூரிக்கு 30 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறிப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக வெளியாகிவில்லை என்றாலும்..முதல் முறையாக கதாநாயகனாக நடித்துள்ள சூரிக்கு இனிவரும் படங்களில் அதிகம் சம்பளம் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.