விடுதலை – 2: விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர்?

ஜுலை, 26-

பெயருக்கு ஏற்றபடி தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை கொடுத்து வருபவர் இயக்குநர் வெற்றிமாறன். அவர், ‘விடுதலை’ படத்தை இரண்டு பாகங்களாக இயக்க முடிவு செய்தார்.

இந்தபடத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சூரி, விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர், பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோர்  பிரதான கதாபாத்திரங்களில் வந்தனர்..

இளையராஜா இசையமைத்த இந்தப்படம் அனைத்து ஏரியாக்களிலும் சக்கை போடு போட்டது. ஆரோக்கியமான விமர்சனத்தை பெற்றதோடு , தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தையும் சம்பாதித்துக்கொடுத்தது.

இப்போது வெற்றிமாறன், ‘விடுதலை இரண்டாம் பாகத்தில் முழு மூச்சாக கவனம் செலுத்தி வருகிறார்.  இதில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னார்  வெற்றிமாறன் டைரக்டு செய்து விருதுகளை அள்ளிய ‘அசுரன்’படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்திருந்தார்.

எனவே விடுதலை 2 ல் மஞ்சு வாரியார் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *