ஜுலை,28-
தெலுங்கானா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இடைவிடாது பெய்து வரும் மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து, பயிர்கள் சேதமடைந்துள்ளன.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று கணித்திருந்தது, ஆனால் உண்மையான மழை அதை விட அதிகமாக இருந்தது.
வானிலையில் ஏற்பட்ட ஒரு வலுவான சுழல் மாநிலத்தில் வரலாறு காணாத மழையை ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது. சுழல் என்பது வளிமண்டலத்தில் அதிக ஈரப்பதம் இருக்கும்போது உருவாகக் கூடியது.
புதன்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட மேகமூட்டத்தால் முலுகு மற்றும் பூபாலப்பள்ளி மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகள் நீரில் மூழ்கி சாலைகள் அடைக்கப்பட்டதால் பல கிராமங்களுக்கு செல்வது துண்டிக்கப்பட்டது. படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் நூற்றுக்கணக்கானவர்களை மீட்க நேரிட்டது.
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி “மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளின் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் 5 குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணி நடந்து வருகிறது” என்று ட்வீட் செய்துள்ளார்.
மராட்டிய மாநிலத்தில் மும்பையில் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது, போக்குவரத்து நெரிசல் மற்றும் புறநகர் ரயில் சேவைகளில் கடந்த இரண்டு நாட்களிலும் தாமதம் நிலவியது.
மும்பபை மற்றும் ராய்காட் மாவட்டத்திற்கு வானிலை மையத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது, ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று அது எச்சரித்தது. மும்பையில் இன்று கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.
இடைவிடாத மழையைத் தொடர்ந்து, மும்பை-புனே விரைவுச் சாலையில் கம்ஷெட் சுரங்கப்பாதைக்கு அருகே நிலச்சரிவு ஏற்பட்டு சாலையின் ஒருவழிப்பாதை தடைப்பட்டது, இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
000