ஜுலை, 27-
இருபது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘ரெட்’ படத்தில் அஜித், சிவப்பு உடையில் ஏதாவது காட்சியில் வந்தாரா என்று தெரியவில்லை.
ஆனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் சிவப்பு நிற உடை – நரைமுடியுடன் புன்னகை பூத்தபடி வெளியே வரும் தோற்றம், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஜெயிலர், லால்சலாம் ஆகிய இரு படங்களை முடித்து விட்டு ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி விட்டார் ரஜினி. லியோவில் தனது பங்கை நிறைவு செய்த விஜய், வெங்கட் பிரபு டைரக்டு செய்யும் படத்தின் ஷுட்டிங்குக்கு கிளம்ப ரெடியாகியுள்ளார்.
ஆனால் ’தல’ அஜித் குறித்து ரொம்ப நாட்களாக அப்டேட் இல்லை. அஜித் நடித்த துணிவு வெளியாகி 6 மாதங்களை கடந்து விட்டது. அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நயன்தாராவின் கணவர் அந்த வாய்ப்பை கோட்டை விட்டு விட்டார். அவரது சொதப்பல்களால் அஜித் 6 மாதங்களை வீணடித்துள்ளார்.
அஜித்தின் அடுத்த படமான ’விடா முயற்சியை மகிழ் திருமேனி இயக்குகிறார். கதை விவாதத்தில் திருமேனி, ஈடுபட்டதால் ,அஜித் ஜாலியாக வெளிநாடுகளுக்கு பறந்து போனார். மகிழ் திருமேனி ’ஸ்கிரிப்ட்’ வேலையை முடித்து விட்டதால் அஜித் சென்னை திரும்பியுள்ளார்.
விமானநிலையத்தில் இருந்து அல்டிமேட் ஸ்டார்.சிவப்பு சட்டை போட்டுக்கொண்டு, சிரித்த முகத்தோடு வெளியே வரும் வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.
அடுத்த மாதம் விடா முயற்சி ஷுட்டிங் ஆரம்பமாகிறது. இதில் திரிஷா, கதாநாயகியாக நடிப்பார் என தெரிகிறது. அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டில்தான், அஜித்தை திரையில் பார்க்க முடியும்.
000