நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக கலைஞராக உருவெடுத்துள்ள தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள ‘இட்லி கடை’ படம் அடுத்த மாதம் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது.
ஆனால் அதே நாளில் அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படமும் வெளியாகிறது.ஆனால் ‘இட்லி கடை’ ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அஜித் படத்துடன் மோதினால், தனது படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்பதால் இட்லிகடை’ வெளியீட்டை தள்ளி வைக்க சொல்லி விட்டார், தனுஷ்.
அஜித் படத்துடன் மோதுவதை தனுஷ், தவிர்க்க இன்னொரு காரணமும் உண்டு. அஜித் நடிப்பில், ஒரு படத்தை டைரக்டு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் , தனுஷ். அண்மையில், அஜித்திடம் தொலைபேசி வாயிலாக கதையொன்றின் ஒன்லைனை தனுஷ் கூறியுள்ளார்.
அஜித்தை நேரில் சந்தித்து முழுக்கதையை கூற இருக்கிறார் தனுஷ்.கார் ரேசில் இப்போது அஜித் வெளிநாடுகளில் பிசியாக இருக்கிறார்.அஜித் சென்னை திரும்பியதும், தனுஷ் கதை சொல்வார் என தெரிகிறது.
அஜித்தை இயக்குவதற்கும், கதை சொல்வதற்கும் ‘இட்லிகடை’ தடையாக இருந்து விடக்கூடாது என்பதால், அந்த படத்தில் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்துவிட்டார், தனுஷ்.
—