”அடிக்கல் நாட்டிய 15 மாதங்களில் திறப்பு விழா காணும் கலைஞர் மருத்துவமனை” – முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

June 15, 23

அடிக்கல் நாட்டிய 15 மாதங்களில் இன்று திறப்பு விழா காண்கிறது ‘கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் 1000 படுக்கைகளுடன் ‘கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை’ கட்டப்பட்டுள்ளது. கருணாநிதியின் நூற்றாண்டு நினைவை போற்றும் வகையில் சுமார் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த மருத்துவமனையை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திடீரென வேறு சில காரணங்களால் வர முடியவில்லை என்று கூறவே, பின்னர் அவரின் அந்த பயண திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து, ‘கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை இன்று மாலை 6 மணிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளார்.

இது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “அடிக்கல் நாட்டிய பதினைந்தே மாதங்களில் இன்று திறப்பு விழா காண்கிறது ‘கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை’. எங்களின் நோக்கங்களை நிறைவேற்றியுள்ளோம்” என பதிவிட்டுள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *