செப்டம்பர்,14-
தெலுங்கு சினிமா உலகில் பெயர் சம்பாதித்த அல்லு அர்ஜுன், ’புஷ்பா ’படம் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டார்
சுகுமார் இயக்கத்தில் அவர் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் வசூலும் குவித்தது.அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமான புஷ்பா-தி ரூல் படத்தில் அவர் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
’புஷ்பா -2’ அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அல்லு அர்ஜுன் , அட்லீ இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.விஜய்க்கு தொடர்ச்சியாக மூன்று வெற்றிப்படங்களை கொடுத்த அட்லீ, இந்தியிலும் வெற்றிக் கொடி நாட்டி உள்ளார்.
ஷாரூக்கான் நடிப்பில் அட்லீ டைரக்டு செய்த ‘ஜவான்’பட ம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.வசூலை வாரி குவித்து வருகிறது. தமிழ் மற்றும் இந்தியில் ஜெயித்த அட்லீ தெலுங்கு
தேசத்தையும் ஒரு கை பார்ப்பது என முடிவு எடுத்துள்ளார்.அல்லு அர்ஜுனை வைத்து அவர், புதிய படம் இயக்க உள்ளார்.இது தொடர்பாக முதல் கட்ட பேச்சு வார்த்தைகள் முடிந்துள்ளன.
தெலுங்கு தேசத்தையும் ‘தெறி’க்க விடுங்க, அட்லீ.
000