அட்லீ டைரக்டு செய்யும் புதிய படத்தில் அல்லு அர்ஜுன் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘புஷ்பா’ இரண்டு பாகங்களும் பெரிய வெற்றி பெற்று, வசூல் குவித்தன. அதன் ஹீரோ அல்லு அர்ஜுன் , இன்றைய தினம் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்துள்ளார்.
‘புஷ்பா-2 ‘ க்குப் பிறகு அல்லு அர்ஜுன் , நம்ம ஊர் இயக்குநர் அட்லீ டைரக்ஷனில் நடிக்க உள்ளார். இது , அட்லீ இயக்கும் 6 –வது படம் என்பதால் இந்த படத்துக்கு தற்காலிமாக ‘’ A 6’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த படத்தில் அல்லு அர்ஜுன் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.இதன் படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் ஆரம்பமாகிறது. ஒட்டு மொத்தமாக இந்த படத்துக்கு 3 மாதங்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார், அல்லு.
இதனை முடித்து விட்டு திரி விக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கிறார்,
—