தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
திருச்செந்தூர் கோயில் அதிகாரி மரணத்துக்கு நீதி கேட்டு, எம்.ஜி.ஆர் ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி நடைப்பயணம் நடத்தினார்.
மது விலக்கை அமுல் செய்ய வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் மாநிலம் முழுவதும் பாதயாத்திரை சென்றார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் நடைப்பயணம் செய்துள்ளார்.
இப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணம்.
‘என் மண் என் மக்கள்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த பாதயாத்திரை இன்று ( 28 ) மாலை ராமேஸ்வரத்தில் ஆரம்பமாகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.
’மோடி அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் நேரில் சென்று எடுத்துரைப்பது இந்த பயணத்தின் நோக்கம்’ என அண்ணாமலை சொல்லியுள்ளார்.
விரைவில் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் ஒரு சில தொகுதிகளிலாவது இந்த நடைப்பயணத்தை நடத்துகிறார், என்பது அனைவருக்கும் தெரியும்.
இதனால், கூட்டணியில் உள்ள அனைத்துக்கட்சிகளுக்கும் தொடக்க விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல் அழைப்பு.
அண்ணாமலையுடன் சுமுக உறவு இல்லாத ஈபிஎஸ் இதில் பங்கேற்க விரும்பவில்லை.பாஜகவை ‘பாலிஷ்’படுத்த நாம் ஏன் போகவேண்டும் என்றும் அவர் நினைத்திருக்கலாம்.
இதனால் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.வி.உதயகுமாரை அனுப்பியுள்ளார், ஈபிஎஸ்.
பாமக தலைவர் அன்புமணிக்கும் அழைப்பு விடுத்தது, பாஜக.
அவரும் தொடக்கவிழாவில் கலந்து கொள்ளவில்லை.
டெல்லியில் அண்மையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு தேமுதிகவை அழைக்கவில்லை.ஆனால் பாதயாத்திரை தொடக்க விழாவில் கலந்து கொள்ளுமாறு தேமுதிக பொருளாளர் பிரேமலதாவை நேரில் சென்றுஅழைத்தார், பாஜக துணைத்தலைவர் கரு,நாகராஜன்.
ஆனாலும் விழாவில் தேமுதிக பங்கேற்காது என தெரிகிறது.
‘234 தொகுதிகள்- 168 நாட்கள்- 1,700 கி.மீ.தூரம்’ என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள யாத்திரை ஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் நிறைவடைகிறது.
Ooo