அண்ணாமலை இனி செருப்பு போட மாட்டார். தனக்குத் தானே சாட்டையால் அடித்துக் கொள்ள முடிவு.

டிசம்பர்- 26,
அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதைக் கண்டித்து நாளை சாட்டையால் அடித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ள அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“நாளை காலை 10 மணிக்கு என்னை நானே சாட்டையால் அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளேன்.
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன்.

நாளையில் இருந்து 48 நாட்கள் விரதம் இருக்கப் போகிறேன். பிப்ரவரி மாதம் ஆறுபடை வீடுகளுக்குச் சென்று முருகனிடம் முறையிடப் போகிறேன் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமது பேட்டியில் தெரிவித்து உள்ளார்.

அஇஅதிமுகவும் தமிழகம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார்.
மேலம் அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவியை பலாத்காரம் செய்த ஞானசேகரன் என்பவர் திமுகவை சேர்ந்தவர் என்பதும் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டாகும்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *