ஜனவரி-27.
சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் பதிவு செய்த FIR லீக் ஆன விவகாரத்தில் காரணமானவர்கள் ரூ.25 லட்சம் செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
எப்.ஐ.ஆர். பதிவு செய்யும் போது அலட்சியமாகவும், கவனக் குறைவாகவும் இருந்த அதிகாரிகளிடம் இருந்து ரூ.25 லட்சம் வசூலித்து மாணவிக்கு வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அந்த உத்தரவில் கூறப்பட்டு இருக்கிறது.
“சென்னை கோட்டூ்ர் புரம் காவல் நிலைய போலீசார் பதிவு செய்த FIR, மாணவியின் செயல் தான் குற்றம் நடைபெற காரணம் என்பது போல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட எப்.ஐ.ஆர். லீக் ஆனதால் தான் மாணவி மீது மற்றவர்கள் குற்றஞ்சாட்டும் கொடுமை அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி தான் குற்றம் நடைபெற காரணம் என்று கூறப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவியை குற்றத்திற்கு காரணம் என கூறுவது குற்றவாளிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும்” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த மாதம் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை முதலில் விசாரித்த உயர் நீதிமன்றம் மூல வழக்கையும் இந்த வழக்கில் எப்.ஐ.ஆர்.வெளியானது குறித்தும் விசாரணை நடத்துவதற்கு மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டு இருந்தது. மேலும் செய்தியாளர் சந்திப்பை நடத்தி வழக்கின் விவரங்களை வெயிட்ட சென்னை காவல்துறை ஆணயைர் அருண் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் காவல் துறை ஆணையர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு இடைக்கால தடை விதித்தது.
இதே வேளையில் எப்ஐஆர் வெளியாவதற்கு காரணமானவர்கள் இடம் வசூலித்து மாணவிகளுக்கு வழங்குவதற்கும் உத்தரவு பிறப்பித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து உள்ளது.
*