டிசம்பர்-26,
பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து அதிமுக சார்பில் நாளை தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகங்கள் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளார்.
இன்னொரு அறிக்கையில்
திமுக அரசு தான் குற்றவாளிகளை ஊக்குவித்தும், காப்பாற்றவும் செய்கிறதோ என அச்சம் ஏற்பட்டு உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.
“சமூக விரோதிகளின் கூடாரமாக தி.மு.க திகழ்கிறது என்பதற்கு அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த பாலியல் சம்பவமே சான்று என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
“ மாணவியை வன் கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக உறுப்பினர் என்று செய்திகள் வருகின்றன.
அவர், துணை முதல்வர், மருத்துவத்துறை அமைச்சர் ஆகியோருடன் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றன.
தமிழ்நாட்டின் மிக முக்கியமான பல்கலைக்கழகத்தில் சிசிடிவி செயல்பாட்டில் இல்லை என்பதை எப்படி நம்புவது?” என்றும் எடப்பாடி பழனிசாமி தமது அறிக்கையில் கேட்டு இருக்கிறார்.