அதிகரிக்கும் கிரெடிட் கார்டு வர்த்தகம்- வளர்ச்சியா..? ஆபத்தா…?

ஜூன் 27

கிரெடிட் கார்டு வழியாக நடைபெற்ற வர்த்தக பரிமாற்றத்தின் கடன் நிலுவைத் தொகை 2 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ள நிலையில் ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். கிரெடிட் கார்டு என அழைக்கப்படும் கடன் அட்டை வழியாக நடைபெற்ற வர்த்தக பரிமாற்றத்தின் கடன் நிலுவைத் தொகை தவணை, முதன்முறையாக 2 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. ரொக்க பணத்தை கொடுத்த காலம் மலையேறிவிட்டது. அதற்கு பிறகு  மக்கள் தங்கள் பொருளாதார சக்திக்கு ஏற்ப தேவையான பொருட்களை, தவணை முறையில் வாங்கும் முறைகள் உருவானது. பின்பு கடன் அட்டை மூலம் எந்த பொருளையும் எங்கும் வாங்கலாம் என்பதால் கடன் அட்டை பயன்பாடு அதிகரித்தது.

1960-களில் இந்தியாவில் கடன் அட்டை பெயர் அளவுக்கு அறிமுகமானது. 1980 ம் ஆண்டுகளில் இந்திய வங்கிகள் கடன் அட்டையை அறிமுகம் செய்தாலும் , 1990 களில் இருந்து கடன் அட்டை வளர்ச்சியை நோக்கி சென்றது. இந்தியாவில், இன்றைய நாளில் சுமார் 8 கோடி கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் 30 சதவீத கடன் அட்டை செயல்பாட்டில் உள்ளது.

கடந்த ஏப்ரல் 2023- ல் கடன் அட்டை மூல்ம் பெற்ற கடனுக்ககா  வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய தொகை  2 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. ஏப்ரல் 2022 உடன் ஒப்பிடும் போது ஏப்ரல் 2023 -ல் கடன் அட்டை கடனுக்கான தவணை தொகை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில் வங்கி கடன் அளவு 16% மட்டுமே உயர்ந்து , 138 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

கடன் அட்டை மூலம் வழங்கப்படும் கடனுக்கு, ரிஸ்க் அதிகம் அல்லது பாதுகாப்பற்ற வங்கிக் கடன் அளவு அதிகரித்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கிறது. ஆனால் கடன் அட்டை வழங்கிய வங்கிகள், நிறுவனங்கள், தாங்கள் வழங்கிய மொத்த கடன் தொகையோடு ஒப்பிடும், போது , கடன் அட்டை வழியாக வழங்கப்பட்ட கடனின் பங்கு சிறிய அளவாக உள்ளதால், கவலைப்பட வேண்டியதில்லை என கருத்து தெரிவிக்கிறது

கடன் அட்டை தவணை தொகை அதிகரிப்பதற்கு அதிகரிக்கும் செலவீனமும், மறுபுறம் பணவீக்கமும் ஒரு காரணம் என்று வங்கியாளர்கள் தெரிவிக்கின்றனர். பொருட்கள் கொள்முதலின் போது, அதே பொருள் , ஆனால் அதிக விலை என்பதால் கடன் அட்டை வழியாக வர்த்தக பரிமாற்ற மதிப்பு எளிதில் உயர்கிறது. அட்டை வழியாக இணைய வர்த்தகம் ஏப்ரல் 2023-ல் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது என நிதி சார் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒட்டுமொத்த வங்கிகள் வழங்கிய கடன் அளவில், கடன் அட்டை வழியாக வழங்கப்பட்ட கடன் 1.4 % உடன்  மூன்றாவது இடத்தில் உள்ளது. அதே சமயம்,தனிநபர் கடன்களில், வீட்டுக்கடன் 14.1%, வாகனக் கடன் 3. 7%, ஆகும். 2008 ஆம் ஆண்டில் உலக பொருளாதார நெருக்கடிக்கு முன்பு, கடன் அட்டை நிலுவைத் தொகையின் 1. 2% ஆக இருந்தது . பிறகுஆகஸ்ட் 2019 இல் மீண்டும் 1% அதிகரித்தது. இருப்பினும், தற்போது கடன் பெற தகுதியான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கடன் அட்டை கார்டு வழங்கடுப்பவதாக வங்கியாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் கடன் அட்டை எண்ணிக்கையானது, “மக்கள்தொகையில் 5 சதவீதக்கும் குறைவானவர்களிடம் மட்டும் உள்ளது. இந்த விகிதம், பல வளரும் நாடுகளை விட குறைவாக உள்ளது” என்றும் வங்கிகள் தெரிவிக்கின்றன. ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி, , ஏப்ரல் 2023 -இல் முடிவடைந்த 12 மாதங்களில், வங்கிக் கடனில் தொழில்துறையின் பங்கு 26. 3% இல் இருந்து 24. 3% ஆகக் குறைந்துள்ளது. ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல் படி, , கடன் அட்டை விவகாரத்தில் வாடிக்கையாளர்களும், வங்கிகளும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *