காஷ்மீரையும் லடாக்கையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் சோஜிலா சுரங்கப்பாதை (( Zojila Tunnel )) அடுத்த ஆண்டுடில் போக்குவரத்துக்கு திறக்கப்பட உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 11 ஆயிரத்து 649 அடி உயரத்திலான இந்தச் சுரங்கப் பாதையை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை சோஜிலா கணவாய் வழியாகத்தான் இந்திய ராணுவத்துக்குத் தேவையான பொருட்கள் காஷ்மீரில் இருந்து லடாக்குக்குச் கொண்டுச் செல்லப்பட்டு வருகின்றன. இந்தப் பாதையும் பயணமும் மிகவும் ஆபத்தானது. குளிர்காலங்களில் கணவாய் மூடப்பட்டு விமானப்படை மூலம் பொருட்களைச் கொண்டு செல்லப்படுகிறது. கணவாய் வழியாக பயணம் செய்கிறவர்களில் சராசரியாக 50 பேர் வரை ஒவ்வொரு ஆண்டும் இறக்கின்றனர். இந்த கணவாய்க்கு மாற்றாகத்தான் நவீன வசதிகளுடன் சோஜிலா சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருகிறது. இது திறக்கப்பட்டால் அனைத்து கால நிலைகளிலும் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியும். பயண நேரம் நான்கு மணி நேரத்தில் இருந்து நாற்பது நிமிடமாக குறைந்துவிடும். சுரங்கப்பாதையின் நீளம் 13 கிலோ மீட்டர் ஆகும்.
2023-04-10