அதிபராக பதவியேற்ற டிரம்ப் எடுத்த அதிரடி முடிவுகள்.

ஜனவரி-21,

உலக சுகாதார அமைப்பில் (WHO ) இருந்து அமெரிக்கா விலகுவதற்கான கோப்பில் அந்த நாட்டின் புதிய அதிபராக பதவியேற்ற டிரம்ப் கையழுத்து இட்டுள்ளார்.

அமெரிக்காவிடம் பெரும் தொகையை நன்கொடையாக பெறும் உலக சுகாதார அமைப்பு , கோவிட் பெருந்தொற்று காலத்தில் சரிவர செயல்படவில்லை என்பது டிரம்பின் குற்றச்சாட்டாகும்.

திங்களன்று அமெரிக்காவின் 47 -வது அதிபராக பதவி ஏற்ற டிரமப் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் உத்தரவில், அவர் மீண்டும் கையெழுத்திட்டார்

டிரம்ப்- ன் முதல் ஆட்சிக்காலத்திலும் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய நிலையில், 2020-ல் பைடன் அதிபரானதும் அந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்து இருந்தது.

அமெரிக்காவில் ஆண் – பெண் என்ற இரு பாலினம் மட்டுமே இனி அங்கீகரிக்கப்படும் என அதிபராக பதவியேற்றதும் ட்ரம்ப் அறிவித்து இருக்கிறார்.

சிறார் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குத் தடை, ராணுவத்தில் மாற்றுப் பாலினத்தவர்களுக்டிகு தடை ஆகிய உத்தரவுகளில் கையெழுத்திட உள்ளதாகவும் டிரம்ப் அறிவித்து இருக்கிறார்,
*

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *