ஜுலை,19-
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று அமலாக்கத்துறை கேட்டுக் கொண்டு உள்ளதால் வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது.
2001 முதல் 2006 ஆண்டு அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடை பெற்றுவருகிறது. சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று இருக்கும் என்பதால் இந்த வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ளக் கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்து உள்ளது.
இதற்கு, விசாரணை 80 விழுக்காடு நிறைவடைந்து உள்ளதால் அமலாக்கத்துறையை சேர்த்துக்கொள்ள முடியாது என்று லஞ்ச ஒழிப்புத்துறை எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது இருதரப்பினரும் தங்கள் வாதங்களை வைத்தனர். இதையடுத்து வழக்கை ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
அமலாக்கத்துறைக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான பிடி இறுகும் என்ற கருத்து நிலவுகிறது.
000