தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் உச்சம் தொட்டவர்கள் மூன்று பேர்.‘மச்சானப்பாத்தீங்களா?’ என அன்னக்கிளியில் ஆரம்பித்த இளையராஜாவின் இசைப்பயணம் ஆயிரம் படங்களை தாண்டி அவரை ஓட வைத்துக்கொண்டிருக்கிறது.
ரோஜா படத்தின் ’சின்ன சின்ன ஆசை’ மூலம் ஏ.ஆர்.ரகுமான், தமிழ் சினிமாவில் நுழைந்தார். ஆஸ்கர் வரை உயர்ந்தார்.
நடிகர் ராகவேந்தரின் மகனான அனிருத், “3” படம் மூலமாக 21 வயதில் சினிமாவுக்கு வந்தார்.ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கிய முதல் படமும் அதுதான்
தனுஷ்- ஸ்ருதிஹாசன் நடித்த அந்த படத்தில் இடம் பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி டி’ பாடல், ஒரே ராத்திரியில் அனிருத்தை இமயம் தாண்டியும் அறிய வைத்தது.
பின்னர் தனுஷின் பல படங்களில் தொடர்ச்சியாக பணியாற்றினார்.
ரஜினியின் பேட்ட, தர்பார், விஜயின் கத்தி, மாஸ்டர், அஜித்தின் வேதாளம், கமலின் விக்ரம் ஆகிய படங்கள் அனிருத்தை தமிழின் நம்பர்- 1 இசை அமைப்பாளராக்கி விட்டது.
இந்த நிமிடத்தில் அனிருத் ரஜினியின் ஜெயிலர், கமலின் இந்தியன் -2, விஜயின் லியோ, அஜித்தின் விடாமுயற்சி ஆகிய படங்களுக்கு இசை அமைத்து உச்சத்தில் நிற்கிறார்.
நம்ம ஊர் அட்லி இயக்க ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்துக்கும் அனிருத்துதான் இசை. முதலில் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமானை கேட்டார்கள்.அவர் தேதி இல்லை என சொல்லி விட்டதால், அனிருத்துக்கு அதிர்ஷ்டம் அடித்தது.
அவர் ஒரு படத்துக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கோடம்பாக்கத்தில் சொல்கிறார்கள்.
வாழ்த்துகள் அனிருத் !
- வேந்தன்
- 000