அன்புமணிக்கு பிடித்த சினிமா

செப்டம்பர்,07-

தரமான சினிமாக்களை கொடுக்கும் தமிழ் இயக்குநர்களில் ஒருவர் தங்கர் பச்சான் .அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கருமேகங்கள் கலைகின்றன. இந்தப்படத்தில் இயக்குநர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை தீட்டியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றுள்ளது.கருமேகங்கள் கலைகின்றன திரைப்படத்தை அண்மையில் பா.ம.க. தலைவர் அன்புமணி பார்த்து ரசித்தார். படம் குறித்து அன்புமணி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,’இயக்குனர் தங்கர்பச்சான் படைத்திருக்கும் கருமேகங்கள் கலைகின்றன திரைப்படத்தை பார்த்தேன்; ரசித்தேன். இப்போது வெளியாகும் படங்கள் கோரம், ரத்தம், கொலை, வன்முறை, ஆபாசம், இரட்டைப் பொருள் தரும் வசனங்களால் நிறைந்துள்ள நிலையில், இந்தத்

திரைப்படம் குடும்ப உறவுகளின் மகிமை, பாசம், கலாச்சாரம்

ஆகியவற்றை பேசுகிறது. இந்தத் திரைப்படத்தை பொதுமக்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று பார்க்க வேண்டும்.’என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

நல்லது சார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *