ஜுன், 27-
உலகில் மிக நீண்ட காலம் பதவியில் இருந்த தலைவர்களில் ஒருவரான கம்போடியப் பிரதமர் ஹுன் சென் ஒரு வழியாக ராஜினாமா செய்துவிட்டார். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் பதவியில் இருந்த அவர், தனது மூத்த மகனிடம் அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு பதவி விலகுவதாக தெரிவித்து இருக்கிறார்.
கம்போடியாவில் ஹுன் சென் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார். அவர், தான் அதிகாரத்தில் இருப்பதை எதிர்க்கும் அனைவரையும் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி நீக்கி அல்லது தனக்குப் போட்டியாக இருக்கும் கட்சிகளை தடை செய்து பதவியில் நீடித்து வருகிறார் என்ற விமர்சனங்கள் உண்டு. அவருக்கு சவால் விட்ட பலர் நாட்டை விட்டே தப்பி ஓட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது உண்டு. அரசியலில் மாற்றுக் கருத்துச் சொல்வதற்கும் அங்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை அங்கு நாடாளு மன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கு முன்னதாகவே ஹுன் சென்னை தீவிரமாக எதிர்த்து வந்த கேண்டில் லைட் கட்சிக்கு தடை விதிக்கப்ட்டு விட்டது. தேர்தலில் 84.6 சதவிகிதம் பேர் வாக்களித்னர். இது நாட்டின் “ஜனநாயக முதிர்ச்சிக்கு” சான்றாக விளங்குகிறது என்ற ஹுன் சென் அரசாங்கம் பாராட்டியது,
தேர்தலில் ஹுன் சென்னின் கம்போடிய மக்கள் கட்சி (CPP) எதிர்ப்பின்றி மகத்தான வெற்றியைப் பெற்றது. அந்தக் கட்சிக்கு 82% வாக்குகள் கிடைத்தன.
ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இந்த வாக்கெடுப்பு சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறவில்லை என்று கண்டனம் தெரிவித்தன.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க், “எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் சுதந்திரமாக செயல்படுவது தடுக்கப்பட்டதோடு “கட்டுப்பாடுகள் மற்றும் பழிவாங்கல்களை” எதிர்கொண்டதாகக் கூறினார்.
இவ்வளவு விமர்சனங்கள் மத்தியில் தேர்தலுக்குப் பின் அதிபராக பதவி ஏற்றுக் கொண்ட ஹுன் சென், 45 வயதாகும் தனது மகன் ஹுன் மானெட் ஆகஸ்ட் 22 ஆம் தேதி புதிய பிரதமராக பதவியேற்பார் என்று தெரிவித்து உள்ளார்.ஹுக் மானெட் தற்போது பாதுகாப்பு இலாகாவை கவனித்து வருகிறார்.
ஆள் மாறலாம், ஆனால் ஆட்சி முறையில் மாற்றம் எதுவும் இருக்கப் போவதில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
000